Valar Tamil Publications - Enclose Readily Digital Magazines

Platform to view all our publications in one place

அயோத்தி வழக்கு விசாரணை ஆரம்பம்

Maalaimani.com

புது தில்லி, பிப்.26

அயோத்தி வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு முன்பு தொடங்கியுள்ளது.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வில் எஸ்.ஏ. பாப்தே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், அப்துல் நசீர் ஆகிய நீதிபதிகள் இடம்பெற்றுள்ளனர். வழக்கின் விவரங்களை ஆங்கிலம், ஹிந்தி, உருது, சமஸ்கிருதம், குர்முகி ஆகிய மொழிகளில் மொழிபெயர்த்து உத்தரபிரதேச அரசு உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. இதன் நகல்களை அனைத்து வாதி, பிரதிவாதிகளுக்கும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அளித்தார்.

அயோத்தி வழக்கு விசாரணை தாமதமில்லாமல் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்றும் வழக்கறிஞர்கள் வீணாக கால தாமதம் செய்ய வேண்டாம் என்றும் கோகோய் வழக்கறிஞர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வழக்கில் இன்னமும் விசாரணை துவங்கவில்லை. எப்போது துவங்கலாம் என்பது தொடர்பாக வழக்கறிஞர்களிடம் தலைமை நீதிபதி ஆலோசனை.

February 26,2019

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of