Valar Tamil Publications - Enclose Readily Digital Magazines

Platform to view all our publications in one place

எல்லையில் பயங்கரவாதிகள் முகாம்கள் அழிப்பு

Maalaimani.com

புது தில்லி, பிப்.26

எல்லையில் பயங்கரவாதிகள் முகாம்களை இந்திய விமானப்படை குண்டுவீசி அழித்தது.

அதிகாலை 3.30 மணிக்கு ஜம்மு-காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டைக் கடந்து சென்று பயங்கரவாதிகள் முகாம்களை குண்டுவீசி அழித்தது. முதலில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டின் அருகே தாக்குதல் நடைபெற்றதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது எல்லைக் கட்டுப்பாட்டுக் கடந்து சென்று தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 ரகத்தைச் சேர்ந்த 12 போர் விமானங்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாகவும், சுமார் 1000 கிலோ எடை கொண்ட குண்டுகள் வீசப்பட்டு பயங்கரவாத முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதாகவும் விமானப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 200க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளும் 5 பாகிஸ்தான் வீரர்களும் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதை பாகிஸ்தான் தரப்பும் உறுதி செய்துள்ளது.

இதனைத் தொடர்ந்து பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவினர் மற்றும் முக்கிய அதிகாரிகள் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து விளக்கம் அளித்தனர்.

February 26,2019

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of