Valar Tamil Publications - Enclose Readily Digital Magazines

Platform to view all our publications in one place

காஷ்மீர் ஆக்கிரமிப்பு பகுதிகளில் தாக்குதல் இந்திய விமானப்படைக்கு தலைவர்கள் பாராட்டு

Maalaimani.com

புது தில்லி, பிப்.26

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் தாக்குதல் நடத்தியதற்கு இந்திய விமானப்படைக்கு, தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் : இந்திய விமானப்படை விமானிகளுக்கு எனது சல்யூட் என தெரிவித்துள்ளார்.

பாஜ மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி: ஆக்கிரமிப்பு காஷ்மீர் என தற்காலிகமாக அழைக்கப்படும் நமது பகுதியில் தான் குண்டுவீசினோம். இதனால், சர்வதேச சட்டம் மீறப்படவில்லை. நமது சுய பாதுகாப்புக்காக நடந்த தாக்குதல் இது.

தில்லி முதல்வர் கெஜ்ரிவால்: பாகிஸ்தானில், பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி, நம்மை பெருமையடைய வைத்த இந்திய விமானப்படை வீரர்களுக்கு எனது சல்யூட்.

மஹாராஷ்டிரா முதல்வர் பட்னாவிஸ்: வீரர்களின் உயிர் தியாகம் வீண் போகாது என நாங்கள் ஏற்கனவே பாகிஸ்தானிடம் கூறினோம். இன்று, இந்தியனாகப் பெருமைப்படுகிறேன். தற்போது கிடைத்த தகவல் மகிழ்ச்சி அளிக்கிறது.

முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா: எல்லை தாண்டி சென்று சிறப்பான நடவடிக்கை எடுத்த நமது தைரியமான விமானப்படைக்கு பாராட்டுகள்.

மத்திய அமைச்சர் ஷெகாவத்: இது மோடியின் இந்தியா. இன்னும், எல்லை தாண்டி பயங்கரவாதிகள் வசிக்கும் இடத்திற்கு சென்று கொல்லுவோம்.

தமிழக முதல்வர் பழனிசாமி: எல்லையில் தாக்குதல் நடத்திய நமது வீரர்களுக்கு தமிழக மக்களின் சார்பில் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். பிரதமர் மோடியின் துணிச்சலான முடிவால் வெற்றிகரமான விமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

திமுக தலைவர் ஸ்டாலின்: தீவிரவாத முகாம்களை தாக்கி அழித்ததற்கு இந்திய விமானப்படைக்கு பாராட்டு.

மக்கள் நீதி மைய தலைவர் கமல் : பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முகாம் மீது இந்திய படையினர் அதிரடி தாக்குதல் நடத்தி பின்னர் மிக பாதுகாப்பாக முகாமுக்கு திரும்பியுள்ள இந்திய ஹீரோக்கள் மூலம் இந்தியா பெருமை கொள்கிறது. அவர்களின் வீரத்திற்கு சல்யூட்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை: இது தரமான சம்பவம்.

February 26,2019

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of