Valar Tamil Publications - Enclose Readily Digital Magazines

Platform to view all our publications in one place

பயங்கரவாதிகள் முகாம் அழிப்பு இந்திய வெளியுறவுத் துறை செயலர் விளக்கம்

Maalaimani.com

புது தில்லி, பிப்.26

பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கும் முகாம்களை அழிக்கவே இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியது என இந்திய வெளியுறவுத் துறை செயலர் விஜய் கோகலே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை செயலர் விஜய் கோகலே செய்தியாளர்களிடம் இன்று விளக்கம் அளித்தார்.

அவர் கூறியதாவது, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் இருந்து செயல்படும் பயங்கரவாத முகாம்கள் பற்றி பாகிஸ்தான் நாட்டுக்கு பலமுறை தகவல் தந்துள்ளோம். ஆனால், பாகிஸ்தான் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்ததோடு, அங்கிருந்து செயல்படும் பயங்கரவாத முகாம்கள் மீது அந்நாடு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாகிஸ்தானுக்குத் தெரியாமல் பயங்கரவாத முகாம்கள் செயல்பட முடியாது.

பயங்கரவாதிகளை தங்களது மண்ணில் அனுமதிக்கமாட்டோம் என்று பாகிஸ்தான் உறுதி அளித்திருந்தது. ஆனால் அதை செயல்படுத்தவில்லை. சுமார் 20 ஆண்டுகளாக பாகிஸ்தானில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கம் செயல்பட்டு வருகிறது. புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு இந்தியாவில் மேலும் சில தற்கொலைப் படை பயங்கரவாதிகளைக் கொண்டு தாக்குதலை நடத்தலாம் என்று தகவல்கள் கிடைத்தன. மற்றொரு தாக்குதலை தடுக்கவே, பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கும் முகாம்களை அழிக்கவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

குறிப்பாக ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத முகாம்களைக் குறி வைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தானின் பாலக்கோட்டில் உள்ள பயங்கரவாத பயிற்சி முகாம் மீது எல்லை தாண்டி விமானப் படையினர் நடத்திய தாக்குதலில் பயிற்சி முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது. விமானப் படையினர் நடத்திய தாக்குதலில் பயிற்சி முகாமில் இருந்த ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரின் உறவினர் தான் இந்த முகாம்களை இயக்கி வந்தார். இந்திய விமானப் படைத் தாக்குதலில் அவரும் கொல்லப்பட்டார் என்று விஜய் கோகலே விளக்கம் அளித்துள்ளார்.

February 26,2019

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of