Valar Tamil Publications - Enclose Readily Digital Magazines

Platform to view all our publications in one place

1,008 சிறுதானிய உணவு திருவிழா

Agridoctor.in

அரியலூர், பிப்.26

அரியலூரில் 1,008 வகையான சிறுதானிய உணவுத் திருவிழாவில் ஆர்வமுடன் மாணவர்கள் பங்கேற்றனர்.

அரியலூர், தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்வி நிறுவனம் சார்பில், 1,008 வகையான சிறுதானிய உணவுத் திருவிழா நடந்தது. இந்த உணவு திருவிழாவில் கேழ்வரகு, கம்பு, சோளம், வரகு, அரிசி, குதிரை வாலி, தினை, கொள்ளு, எள், உளுந்து, பச்சைப்பயிறு, கொடுக்காபுளி உள்ளிட்ட, 150க்கும் மேற்பட்ட சிறுதானியங்களைக் கொண்டு, கேழ்வரகு புட்டு, பக்கோடா, பணியாரம், இடியாப்பம், கிச்சடி, உளுந்து அவியல், எள் அடை, கொள்ளு கஞ்சி, கம்பு கூழ், கம்புமாவு பக்கோடா, தட்டை பயிர் கஞ்சி, பச்சை பயிறு சுளியம், தினை பாயாசம், கொடுக்காபுளி பாயாசம், உளுந்து வடை, உளுந்தங்கஞ்சி, சோள தோசை, வரகு பொங்கல், திணை பொங்கல், குதிரைவாலி பிரியாணி என, 1,008 வகையான சிறுதானிய உணவு வகைகளை மாணவர்களே தயார் செய்து காட்சிப்படுத்தி இருந்தனர்.

இதுகுறித்து கல்லூரி தாளாளர் கூறியதாவது: இந்த உணவுத் திருவிழாவின் முக்கிய நோக்கம் தாய், சேய் இறப்பு விகிதத்தை குறைத்தல், அனைவருக்கும் ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதி செய்தல், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனை மேம்படுத்துதல் மற்றும் நம் முன்னோர்கள் வரகு, தினை, சாமை, குதிரைவாலி, கேழ்வரகு சோளம், கொள்ளு முதலியவற்றை உண்டு நலமாக வாழ்ந்தனர். ஆனால் தற்போது அரிசி, மைதா, பீட்சா போன்ற உடலுக்கு ஒவ்வாத உணவு பொருட்களை உண்டு வாழ்கிறோம். இதனால் சில குழந்தைகள் பிறக்கும்போதே சர்க்கரை வியாதியுடன் பிறக்கின்றன. அக்காலத்தில் மண்பானை, இரும்புப் பாத்திரங்கள், இரும்பு வாணலி, செப்பு பாத்திரம் பயன்படுத்தி உணவு சமைத்தனர். அதனால் அவர்களுக்கு தேவையான இரும்புசத்து, பாஸ்பரஸ், துத்தநாகம் உள்ளிட்டவை அந்த சமையல் பாத்திரங்களில் இருந்தே கிடைத்தது. ஆனால், தற்போது நான்ஸ்டிக் தவா போன்ற பொருட்களை பயன்படுத்துவதால், நம் உடல் ஆரோக்கியம் விரைவிலேயே பலம் இழந்து விடுகிறது என்று பாரம்பரிய உணவின் முக்கியத்துவத்தை மாணவர்கள் அறிந்து கொள்ள, இந்த கண்காட்சி நடத்தப்பட்டது. இதில், 4,500 மாணவர்கள் பங்கேற்று பயன்பெற்றனர். இவ்வாறு அவர் கூறினார்

February 26,2019

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of