August 5, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ஃபோக்ஸ்வேகேன் போலோ 2021 கார் சர்வதேச சந்தையில் அறிமுகம்

புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ 2021 கார் உலக அளவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

உலக அளவில் விற்பனையாகும் ஹேட்ச்பேக் கார்களில் போலோ காருக்கு தனி மதிப்பு கிடைத்துள்ளது. தற்போது இந்தக் காரின் 6வது தலைமுறை பதிப்பை ஃபேஸ்லிஃப்ட் மாடலாக ஃபோக்ஸ்வேகன் வெளியிட்டுள்ளது.

இந்தக் காரில் ஹெட்லைட்டுகளுக்கு இடையில் எல்இடி விளக்கு பட்டை சேர்க்கப்பட்டுள்ளது. புதிய பம்பர் அமைப்பு மற்றும் பின்புற கதவு டிசைனில் மாற்றம் தெரிகிறது. மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட்டுகளும் முக்கிய அம்சமாக உள்ளது.

இண்டீரியரில் 6.5 அங்குல டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்ப வசதியும் உள்ளது. 9.2 இன்ச் டச்ஸ்க்ரீனையும் ஆப்சனலாக வாங்கிக்கொள்ளலாம்.

புதிய ஸ்டீயரிங் வீல், கோல்ஃப் காரில் வழங்கப்படும் க்ளைமேட் கன்ட்ரோல் டிஸ்ப்ளே உள்ளிட்ட அம்சங்களும் இந்தக் காரில் உள்ளன.

இந்த காரில் லெவல்-2 ஆட்டோமேடிக் டிரைவ் வசதியும் உள்ளது.

புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ காரில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் தரப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 80 எச்பி முதல் 110 எச்பி வரை பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்ட மாடல்களில் கிடைக்கும்.

இந்த ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியா வருவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளதாக தெரிகிறது. அதேவேளையில் 7ம் தலைமுறை கார் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Spread the love