அகில் இயல்பாய் வளரும் ஒரு மரவகை. இதன் உலர்ந்த மரக்கட்டைகள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். கட்டை மருத்துவப் பயனுடையது. பித்த நீர் பெருக்குதல், உடல் வெப்ப மிகுத்தல், வீக்கம் கரைத்தல் ஆகிய மருத்துவ குணமுடையது. அகில் கட்டையை நீர்விட்டு சந்தனம் போல் அரைத்து உடலில் பூசி வர முதுமையில் தளர்ந்த உடல் இறுகும். அட்டையினை பொடித்து நெருப்பில் இட்டு புகைத்து புகையை முகர்ந்தாலோ, உடலில் படுமாறு செய்தாலே உடல் அயர்ச்சி வாந்தி, சுவையின்மை ஆகியவை தீரும். வெட்டுக்காயம், புண் ஆகியவற்றில் வலி தீரும். அகில் கட்டையை ஓரிரண்டு இடித்து நீரில் இட்டு நாலில் ஒன்றாகக் காய்ச்சி வடிகட்டிய குடிநீர், நல்லெண்ணெய், பால் ஆகியவற்றை வகைக்கு ஒரு லிட்டர் கலந்து அதில் தாண்டி தோல் அதிமதுரம் வகைக்கு 40 கிராம் பொடித்து அதில் தயலம் முடித்த பயன்படுத்தி வர நீர் கோவை, பினிசம், மேகம் முதலியவை குணமாகும்.
அகில்

Spread the love