அகில் இது ஒரு மரவகை. உலர்ந்த மரக்கட்டைகள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். கட்டை மருத்துவ பயன் உடையவை. பித்த நீர் பெருக்குதல், உடல் வெப்பம் மிகுத்தல், வீக்கம் கரைத்தல் ஆகிய மருத்துவ குணம் உடையது. அகில் கட்டையை நீர்விட்டு சந்தனம் போல் அரைத்து உடலில் பூசி வர முதுமையில் தளர்ந்த உடல் இருக்கும், அட்டையினை பொடித்து நெருப்பு அனலில் இட்டு புகைத்து புகையை முகர்ந்தால் உடலில் படுமாறு செய்தாலே உடல் அயர்ச்சி வாந்தி, சுவையின்மை ஆகியவை தீரும். வெட்டுக்காயம், புண் ஆகியவற்றில் வலி தீரும். அட்டையை ஓரிரண்டு இடித்து நீரில் இட்டு நாளில் ஒரு பகுதியை காய்ச்சி வடிகட்டிய குடிநீரை நல்லெண்ணெய், பால் ஆகியவற்றை வகைக்கு ஒரு லிட்டர் கலந்து அதில் தான்றிக்காய் தோல் அதிமதுரம் வகைக்கு 40 கிராம் பொடித்து பாலில் அரைத்து சேர்த்து காய்ச்சி வடிகட்டிய தைலம், அகிலம் பயன்படுத்தி வர நீர் கோவை, பினிசம் முதலியவை குணமாகும். 20 கிராம் அட்டையை ஒன்றிரண்டாக இடித்து ஒரு லிட்டர் நீரிலிட்டு 125 மில்லி ஆகுமாறு காய்ச்சி வடிகட்டி பதினைந்திலிருந்து முப்பது மில்லி அளவாக நாள்தோறும் மூன்று வேளை கொடுத்து வர உடல்பலம் மிகுந்த உற்சாகம் உண்டாகும்.
அகில்

Spread the love