June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

அக்ரி எக்ஸ்போ 2022ல் தமிழ்நாடு அப்பளம் உற்பத்தியாளர் சங்கம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை, ஜூன் 6

தமிழக அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்பு குழு மற்றும் SRM பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய “சென்னை அக்ரி எக்ஸ்போ 2022” ஜூன் 3ல் துவங்கி 5ம் தேதி வரை சென்னை காட்டாங்கொளத்தூரில் SRM பல்கலைக்கழக கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விதை முதல் விற்பனை வரை என்ற திட்டத்தின் மூலம் தமிழ்நாடு அப்பளம் உற்பத்தியாளர் சங்கம் முதல் கட்டமாக மாதம் 500 டன் கருப்பு உளுந்து நேரடியாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய தமிழக அளவில் உழவர்களை ஒருங்கிணைத்து செயல்படும் ஐந்திணை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் SRM பல்கலைக்கழக வேந்தர் பாரிவேந்தர், பாராளுமன்ற உறுப்பினர் முன்னிலையில் ஒப்பந்தம் செய்து கொண்டனர். இந்நிகழ்வில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் P.R.பாண்டியன், தமிழ்நாடு தொழில் வணிகம் மற்றும் வர்த்தக சங்கத்தின் முதுநிலை தலைவர் ரெத்தினவேல், தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ராமசாமி, APEDA தமிழ்நாடு செயலாளர் சோபனா, தமிழ்நாடு பொருளாதார மேம்பாட்டு கழக தலைவர் J.K. முத்து, தமிழ்நாடு அப்பளம் உற்பத்தியாளர் சங்க தலைவர் ஜி.திருமுருகன், சித்தா மருத்துவர் Dr.சிவராமன்,

ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் துணைத் தலைவர் ஜி.ராஜமூர்த்தி, ஐந்திணை உழவர் உற்பத்தியாளர் நிறுவன தலைவர் அருண் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Spread the love