மதுரை, ஜூன்13
மதுரை கிழக்கு வட்டாரத்தில் சித்தாக்கூர் கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் 10.06.2022 அன்று அங்ககச்சான்று பெறுவதற்கான வழிமுறைகள் குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் மதுரை மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம்) கு.சிவ.அமுதன் தலைமையில் விவசாயிகளுக்கு அங்கக விவசாயத்தின் முக்கியத்துவம் மற்றும் நன்மைகள் குறித்து விளக்கப்பட்டது. மேலும் அங்ககச்சான்று பெறுவதற்கான நடைமுறைகள், பதிவு கட்டணம், பராமரிக்கப்பட வேண்டிய ஆவணங்கள், வயலாய்வு செய்யும் முறைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும் இப்பயிற்சியில் கலந்து கொண்ட அனைத்து விவசாயிகளுக்கும் அங்ககக வேளாண்மை பயிற்சிக் கையேடு வழங்கபட்டது. மேலும் இப்பயிற்சியில், சி.சிங்காரலீனா, விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர், மதுரை, வளர்மதி, வேளாண்மை உதவி இயக்குநர், மதுரை கிழக்கு, முனைவர் க.கண்ணன், விதைச்சான்று அலுவலர் (தொ.நு), ரா.மணிகண்டன், அங்ககச்சான்று ஆய்வாளர், மதுரை ஆகியோர் அங்கக வேளாண்மையின் முக்கியத்துவம் அங்ககச்சான்று பெறுவதின் நன்மைகள் மற்றும் அங்ககச்சான்று பெறும் வழிமுறைகள் குறித்து எடுத்துக்கூறினர். மேலும், பாரம்பரிய நெல் சாகுபடி செய்யும் முன்னோடி விவசாயி புவனேஸ்வரி செல்வம் அங்கக முறையில் பாரம்பரிய நெல் சாகுபடி தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்.
Spread the love