June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

அங்ககச்சான்று பெறுவதற்கான வழிமுறைகள் குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி

மதுரை, ஜூன் 22

மதுரை மாவட்டம், கள்ளிக்குடி வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் 22.06.2022 அன்று தென்னமநல்லூர் கிராமத்தில் அங்ககச்சான்று பெறுவதற்கான வழிமுறைகள் குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சிக்கு சி.சிங்காரலீனா, விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர், மதுரை, தலைமையேற்று விவசாயிகளிடம் அங்ககச்சான்று பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கினார். உலகம்மாள், கள்ளிக்குடி, வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு அங்கக வேளாண்மை அங்கக விவசாயத்தின் நன்மைகள் குறித்து விளக்கினார். சு.நந்தினி, டீ.பு ஊசழி ளுஉநைnஉந நிலைய தொழில்நுட்ப அலுவலர் கலந்து கொண்டு மண்வளத்தைப் பற்றியும் உயிர் உரங்கள் பற்றியும் விளக்கினார். முனைவர் க.கண்ணன், விதைச்சான்று அலுவலர்(தொ.நு) மற்றும் து.சந்தீப்சௌத்ரி, விதைச்சான்று அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டு அங்ககச்சசான்று பெறுவதற்கான வழிமுறைகள் பற்றி விளக்கும் போது பதிவு கட்டணம் பராமரிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் மற்றும் வயலாய்வு செய்யும் முறைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர். மேலும் இப்பயிற்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் 40 விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Spread the love