June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

அங்ககப்பண்ணையில் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் ஆய்வு

ஈரோடு, மே 13

ஈரோடு அடுத்த மாமரத்துப்பாளையம் கிராமத்தில் கோபால் – பூங்கொடி தம்பதியினர் இயற்கை முறையில் காய்கறி பயிர்களை விவசாயம் செய்து வருகின்றனர். இப்பண்ணையானது உபரியாக கிடைக்கும் பண்ணை கழிவுகளைக் கொண்டு உர மேலாண்மை, பூச்சி மற்றும் நோய் மேலாண்மையும் செய்து தரமான முறையில் அங்கக காய்கறிகளை உற்பத்தி செய்து வருகின்றனர். இப்பண்ணையை ஈரோடு, விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் சு.மோகனசுந்தரம் ஆய்வு செய்தார். மேலும், அவர் கூறியதாவது, தமிழ்நாடு அங்ககச்சான்று துறையின்கீழ் அங்கக பண்ணையாக இப்பண்ணை பதிவு செய்யப்பட்டு இருப்பதால், இப்பண்ணையில் தமிழ்நாடு ஊரக இளைஞர் திறன் மேம்பாடு பயிற்சி திட்டத்தின்கீழ் ஊரக இளைஞர்களுக்கு அங்ககச்சான்று தொடர்பான கள பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், அங்ககச்சான்று முறைப்படி விவசாயம் செய்யும் விவசாயிகள் தமிழ்நாடு அங்ககச்சான்று துறையின் கீழ் பதிவு செய்து அங்கக சான்றிதழ் பெற்று விளைபொருட்களை விற்பனை செய்து அதிக லாபம் பெறலாம் எனவும் தெரிவித்தார்.

மேலும், அங்கக விவசாயி கோபால், இயற்கை இடுபொருட்களான ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறை மற்றும் பயன்படுத்தும் முறை, இனக்கவர்ச்சி முறையை பற்றியும் செயல் விளக்கம் அளித்தார். மேலும், ஈரோடு அங்ககச்சான்று ஆய்வாளர் மகாதேவன், அங்ககச்சான்று நடைமுறைகள் பற்றி எடுத்துக் கூறினார். இப்பயிற்சியில் வேளாண்மை அலுவலர் (உபநி) சுகன்யா, விதைச்சான்று அலுவலர் (தொழில்நுட்பம்) கணேசமூர்த்தி மற்றும் ஊரக இளைஞர்கள் உடனிருந்தனர்.

Spread the love