June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

அங்கக பண்ணையில் நெல் விதை நேர்த்தி முறைகள்

தேவகோட்டை வேளாண்மைத்துறையின் கீழ் வட்டார விரிவாக்க மையம் மூலமாக வேளாண்மை உதவி இயக்குநர் விவசாயிகளை சந்தித்து அங்கக பண்ணையில் நெல் விதை நேர்த்தி செய்தல் முறைகள் பற்றி கீழ்க்கண்டவாறு விரிவாக எடுத்தரைத்தார்.

விதை நேர்த்தி முறைகள் :
விதை நேர்த்தியானது, முளைக்கும் திறன், முளைப்பு வீரியம் அதிகரிக்க, பூச்சிகள் மற்றும் நோய்களை எதிர்க்க உதவுகிறது. பல்வேறு நெல் விதை நேர்த்தி முறைகளை கீழே காண்போம்.
· விதைகளை தண்ணீரில் ஊறவைத்தல் : முதலில் விதைகளை சாக்கு பை (அ) துணிப்பையில் கட்டி தண்ணீரில் 12 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின்னர், அதை வெளியே எடுத்து ஈர சாக்குபை கொண்டு மூடி விட வேண்டும். அதே நாளில், மறுபடியும் தண்ணீரில் 8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் அந்த விதைகளை நாற்றங்காலில் விதைக்க வேண்டும். இந்த விதை நேர்த்தி விதைகளின் முளைப்புத் திறனை அதிகரிக்க உதவுகிறது.
· மாட்டு கோமியம் மற்றும் மாட்டு சாணம் கொண்டு விதை நேர்த்தி செய்தல் : நெல் விதைகளை மாட்டுக் கோமியம் கொண்டு விதை நேர்த்தி செய்தால் முளைப்புத்திறன் அதிகரிக்கும். முதலில் அரை கிலோ மாட்டு சாணம் மற்றும் 2 லிட்டர் மாட்டு கோமியம் எடுத்து அதை 5 லிட்டர் தண்ணீரில் கலக்க வேண்டும். பிறகு 10 -15 கிலோ விதைகளை முதலில் தண்ணீரில் 10 -12 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின் மாட்டு சாண கரைசலில் 5-6 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். நாற்றங்காலில் விதைப்பதற்கு முன் விதைகளை நிழலில் உலர்த்த வேண்டும்.
· மாட்டு கோமியம் பயன்படுத்தி விதை நேர்த்தி : மாட்டு கோமியம் 500 கி.கி எடுத்து 2.5 லிட்டர் தண்ணீரில் கலக்க வேண்டும். விதைகளை ஒரு சிறிய பையில் கட்டி இந்த கரைசலில் அரை மணி நேரம் ஊற வைக்கவும். பின் நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும்.

உயிர் உரங்கள் கொண்டு விதைநேர்த்தி செய்தல் :
உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் அல்லது அசிட்டோபேக்டர் மற்றும் பாஸ்போபேக்டீரியா (தலா 1.0 கிலோ / எக்டர் அல்லது 125 மில்லி லிட்டர்) ஆகியவற்றை முதலில் அரிசி கஞ்சியில் கலக்க வேண்டும். நல்ல சுத்தமான தரையில் விதைகளை பரப்பி, பின் உயிர் உர கூழ்மத்தை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். விதைப்பதற்கு முன் விதைகளை நிழலில் 30 நிமிடங்கள் உலர்த்தி விதைக்க வேண்டும்.

முளைப்புத் திறனை மேம்படுத்துவதற்கான விதை நேர்த்தி (ளுநநன வுசநயவஅநவெ வுநஉhnஙைரநள)
· விதைகளை பிரகாசமான சூரிய ஒளியில் (மதியம் 12.00-1.00 மணி இடையே) அரை மணி நேரம் உலர்த்தி விதைப்பு செய்வதால் முளைக்கும் திறன் அதிகரித்து வீரிய நாற்றுகளை பெற முடியும்.
· விதைப்பதற்கு முப்பது மணி நேரத்திற்கு முன்பு நெல் விதைகளை பஞ்சகாவ்யாவில் (35 மிலி / லிட்டர் தண்ணீர்) ஊற வைக்க வேண்டும்.
ஆரோக்கியமான நாற்றுக்களுக்கான விதை நேர்த்தி
· இறுக்கி மூடப்பட்ட சாக்குப் பையில் நெல் விதைகளை எடுத்துக்கொண்டு அதை 24 மணி நேரம் ஊற வைத்து விதைப்பதால் பசுமையான மற்றும் வீரிய நாற்றுகளை பெற முடியும்.
· மண்பானையில் மாட்டுக் கோமியத்தை எடுத்து, அதை 48 மணிநேரம் வரை வைத்திருக்க வேண்டும். இதில் 10 சதவிகித மாட்டுக் கோமியத்தில் நெல் விதைகளை ஊறவைத்து (100 மிலி மாட்டுக் கோமியம்/1 லி தண்ணீர்) விதைத்தால் ஆரோக்கியமான விதை நாற்றுகளை பெற முடியும்.
· நொச்சி, துளசி மற்றும் புங்கை இலையின் சாறு எடுத்து (ஒவ்வொரு இலையிலும் 3 கிலோ எடுத்து அரைத்துக் கொள்ளவும்) அதை புதிய மாட்டுச் சாண கரைசலுடன் கலந்து, பின் ஒரு சாக்குப் பையில் 25 கிலோ நெல் விதைகளை எடுத்து இறுக்கமாக கட்டி அதனை அக்கரைசலில் 12 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். விதைகளை அரை மணிநேரம் நிழலில் உலர்த்தி விதைப்பு செய்தால் ஆரோக்கியமான மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட நாற்றுகளை பெற முடியும்.

பூச்சி மற்றும் நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் விதை நேர்த்தி முறைகள்:
· விதைகளை 12 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து அதனுடன் 10 சதவிகித மாட்டு கோமியம் (10 மிலி மாட்டு கோமியம் + 90 மிலி தண்ணீர்) அல்லது 5 சதவிகித புரோசோபிஸ் கசாயம் கலந்து பின் அதனை 30 நிமிடங்கள் உலர்த்த வேண்டும்.
· நெல் விதைகளை காடா துணியில் சிறு கட்டுகளாக்கி அதை மாட்டுக் கோமியத்தில் (500 மிலி மாட்டுக் கோமியம்/2.5 லி தண்ணீர்) அரை மணிநேரம் ஊற வைத்து பின் விதைக்க வேண்டும். இந்த விதை நேர்த்தி முறை விதை மூலம் பரவும் பு+ஞ்சாணம் மற்றும் பாக்டீரியா நோய்களிலிருந்து பயிர்களை பாதுகாக்கிறது.
· விதைப்பதற்கு 12 மணி நேரத்திற்கு முன்பு நெல் விதைகளை புதினா இலைச்சாறு 20 சதவிகிதம் (200 மிலி இலைச்சாறு + 800 மிலி தண்ணீர்) ஊற வைக்கவும். இதனால் முளைக்கும் விகிதம் அதிகரித்து வீரிய நாற்றுகளை பெற முடியும். மேலும் இது நெல்லைத் தாக்கும் ஹெல்மின்தோஸ்போரியம் இலைப்புள்ளி நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
· விதைப்பதற்கு முன் முளை விட்ட நெல் விதைகளை சிறிய பைகளில் கட்டி அதை இனிப்புக்கொடி சாற்றில் (500 கிராம் இனிப்பு கொடி கிழங்கு தூள்ஃ 2.5 லி தண்ணீர்) 30 நிமிடங்கள் ஊற வைத்து, நிழலில் உலர்த்த வேண்டும். இது விதை மூலம் பரவும் பாக்டீரியா மற்றும் பூஞ்சை நோய்களுக்கு எதிராக பயிர்களை பாதுகாக்கிறது.

· பயிர் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்திற்கான விதை நேர்த்தி விதைப்பதற்கு முன் நெல் விதைகளை மாட்டுச் சாணத்துடன் கலக்க வேண்டும். இந்த மாட்டுச் சாணம் நெல் விதைகளை பறவைகள் மற்றும் பூச்சிகளின் தாக்குதலிலிருந்து பாதுகாக்கிறது. மேலும் இந்த சாணம் விதைகளுக்கு உரமாகவும் பயன்படுகிறது. இந்த முறை வறட்சியில் விதைகளை கடினப்படுத்தவும் உதவுகிறது. இது மானாவாரி நெல் சாகுபடிக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

Spread the love