தேனி, ஜூலை 13
தேனி மாவட்டம், போடி வட்டாரம் அகமலை கிராமத்தில் உள்ள முத்துவேல்பாண்டியனின் அங்கக பண்ணையினை சென்னை, அங்ககச்சான்று துணை இயக்குநர் (தர மேலாளர்) கிருஷ்ணவேணி, ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கக உரங்கள் மற்றும் இயற்கை பூச்சி விரட்டிகள் குறித்து விவசாயிடம் எடுத்துக் கூறினார். மேலும் பண்ணையில் பதிவேடுகள் பராமரிப்பது குறித்து விளக்கினார். பண்ணையில் உற்பத்தியாகும் விளை பொருட்கள் அங்கக அங்காடிகள் மூலம் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்கு தனியாக அங்கக குறியீடு பெற்று லாபம் பெறுமாறு விவசாயிடம் விளக்கி கூறினார். ஆய்வின் போது தேனி விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் திலகர், விதைச்சான்று அலுவலர் முத்து சேகர் மற்றும் ஷன்மதி ஆகியோர் உடனிருந்தனர்.
Spread the love