August 8, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

அங்கக வேளாண்மைக்கு ஊட்ட மேற்றிய தொழு உரம் தயாரித்தல்

தொழுவுரத்தினை நேரடியாக பயன்படுத்தாமல், ஊட்டமேற்றிய தொழுவுரமாக தயார் செய்து அதனை பயன்படுத்தினால் குறைவான அளவே போதுமானது. மேலும் பயிருக்கு தேவையான சத்துக்கள் அதிக அளவில் கிடைக்கும்.

ஊட்டமேற்றிய தொழுவுரம் தயாரிக்கும் முறை
ஒரு ஏக்கருக்கு மக்கிய தொழுவுரம் 200 கிலோ, அதனுடன் அசோஸ்பைரில்லம் – 3 கிலோ, பாஸ்போபாக்டீரியா – 3 கிலோ, பொட்டாஷ் பாக்டீரியா – 3 கிலோ, சூடோமோனஸ் – 1 கிலோ, வேப்பம் புண்ணாக்கு – 5 கிலோ ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி, தண்ணீர் தெளித்து 3 முதல் 4 நாட்கள் நிழலில் ஆறவிட்டு, கல், தூசி முதலியவற்றை நீக்கி தார்பாய் கொண்டு மூடி நிழலில் ஒரு வாரம்வரை வைத்திருந்து பின்னர் பயிருக்கு அடியுரம் மற்றும் மேலுரமாக பயன்படுத்தலாம்.

ஊட்டமேற்றிய தொழுவுரத்தின் பயன்கள்

  1. தொழுவுரத்தினை ஊட்டமேற்றி பயன்படுத்துவதால் செலவு குறையும்.
  2. நுண்ணுயிர்கள் அதிகரிக்கும்.
  3. பயிருக்கு தேவையான தழை, மணி, சாம்பல் சத்துக்களும், நுண்ணுட்ட சத்துக்களும் கிடைக்கும்.
  4. பயிரின் வளர்ச்சி ஒரே சீராக இருக்கும்.
  5. பூச்சி மற்றும் நோய் தாக்குதல் குறையும்.
  6. சுற்றுப்புற சூழலுக்கு பாதுகாப்பானது.
  7. மகசூல் 20-30 சதவீதம் கூடும்.
  8. மண்வளம் கூடும்.
  9. காய்கறிகள் விரைவில் கெடாது. பளபளப்புடனும், சுவை மிகுந்தும் காணப்படும்.

அங்கக வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகள் ஊட்டமேற்றிய தொழுவுரம் தயாரித்து வயலுக்கு இட்டு பயனடையுமாறு நாகப்பட்டினம், விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் ஆர்.சுதா தெரிவித்துள்ளார்.

Spread the love