October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

அங்கக வேளாண்மைக்கு மாறுங்கள்: விதைச்சான்றுத்துறை விழிப்புணர்வு

விழுப்புரம், அக்.6

இயற்கை விவசாயம் அல்லது அங்கக வேளாண்மை என்பது முற்றிலும் அங்ககப் பொருட்களான இயற்கை எரு, பசுந்தாள் உரங்கள் மற்றும் பஞ்சகாவ்யா ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படும் விவசாய முறையாகும்.

இம்முறையில் ரசாயனப் பொருட்களான உரங்கள், களைக்கொல்லிகள், பூச்சி நோய் மருந்துகள் மற்றும் ரசாயன இடுப்பொருட்கள் முற்றிலும் பார்க்க வேண்டும். விவசாயிகள் நீர்வளத்தை காக்கவும் நீர்வாழ் உயிரினங்களின் பல்லுயிர் பெருக்கத்தை காக்கவும் அங்கக வேளாண்மைக்கு மாற வேண்டும். மத்திய அரசும், தமிழக அரசும் இணைந்து அங்கக வேளாண்மையை ஊக்குவிக்க பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். தற்போது நச்சு தன்மையில்லாத விளை பொருட்களுக்கு அதிக ஏற்றுமதி வாய்ப்பு மற்றும் உள்நாட்டு சந்தையில் நல்ல விலை கிடைக்கிறது. தமிழகத்தில் விவசாயிகள் இயற்கை வேளாண்மையில் நச்சு தன்மையில்லாத விளை பொருட்களை உற்பத்தி செய்ய தமிழக விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று துறை பெரும் பங்காற்றி வருகிறது. உணவு தானியம், சிறு தானியம், பயறு, எண்ணெய்வித்துக்கள், கரும்பு, காய்கறி, மூலகை பயிர்கள் மற்றும் பழங்கள் சாகுபடியில் நச்சு தன்மையில்லாத விளை பொருள்கள் உற்பத்தி செய்வதில் தமிகழத்தில் அங்ககச்சான்றளிப்பு துறை மத்திய அரசின் தேசிய அங்கக வேளாண்மை செலய் திட்டத்தின்படி செயல்பட்டு வருகிறது.

அங்கக விளைபொருட்கள் உற்பத்தி செய்பவர், அங்கக விளை பொருட்கள் பதனிடுவோர் மற்றும் அங்கக பொருட்கள் விற்பனை செய்பவர்கள் தமிழக அரசு விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று துறை மற்றும் மத்திய அரசின் அப்பிடா நிறுவனத்தின் அங்கீகாரத்தின் அடிப்படையில் தனிநபராகவோ, குழுவாகவோ பதிவு செய்து கொண்டு இயற்கை வேளாண்மை சான்றினை பெறலாம்.

இச்சான்றிதழ் பெற விண்ப்ப படிவம் 3 நகல்கள், பண்ணையின் பொது விபர குறிப்பு 3 நகல்கள், பண்ணையின் வரைபடம், மண் மற்றும் பாசன நீர் பரிசோதனை விபரம், ஆண்டு பயிர் திட்டம், துறையுடனான ஒப்பந்தம் 3 நகல்கள், நில ஆவணம், வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு போட்டோ 2 ஆகியவற்றடன் 3 நகல்களில் உரிய விண்ணப்பத்துடன் உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். பதிவு கட்டணம், ஆய்வு சான்று கட்டணம், பயணநேர கட்டணம் வருடத்திற்கு சிறு, குறு விவசாயிகள் மொத்தம் ரூ.2700/-ம் பிற விவசாயிகள் ரூ.3200/-, குழு ஒன்றுக்கு பதிவு செய்ய ரூ.7200/-, வணிக நிறுவனங்களுக்கு ரூ.9400/- கட்டணமாக செலுத்த வேண்டும். விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், விழுப்புரம், மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர், க.கதிரேசன் தெரிவித்துள்ளார்.

Spread the love