சிவகங்கை மாவட்டம், கல்லல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சு.அழகுராஜா, அங்கக வேளாண்மையில் தேனீ வளர்ப்பு பற்றிய தொழில்நுட்ப செய்தியை கூறியதாவது
தேனீ வளர்ப்பின் தேவை :
தேன் அருமையான உணவு, உடல் நலத்தை காப்பதில் தேனுக்கு நிகர் எதுவும் இல்லை. உழவனுக்கு உற்ற தோழனாக அயல் மகரந்த சேர்க்கைக்கு உதவுகிறது இதனால் விளைச்சல் 25-35% கிடைக்கிறது. தென்னையில் விளைச்சலை அதிகப்படுத்த, தேனீ வளர்ப்பு அதிக இலாபத்தை ஈட்டி தருகிறது என்றும் கூறினர்.
தேனீ வகைகள் :
ü இத்தாலி தேனீ (யுpளைஅநடடகைநசய)
ü கொசு தேனீ (யுpளைஅநடடipழயெ)
ü கொம்பு தேனீ (யுpளைகடழசநய)
ü மலை தேனீ (யுpளைனழசளயவய)
ü இந்திய தேனீ (யுpளைiனெiஉய)
தேன் எடுத்தல் மற்றும் பதப்படுத்துதல்
புழு அறையில் உள்ள தேன் அடைகளிலிருந்து தேன் எடுக்கக் கூடாது. தேனீக்கு தேவையான உணவு இருப்பு வைத்து விட்டு தேன் எடுக்க வேண்டும். தேனீக்கள் சுறுசுறுப்பாக இயங்கும் பொழுது குறைவான தேனீக்களே பெட்டியில் இருக்கும். எனவே காலை வேளையில் தேனடைகளை சுத்தம் செய்வது நல்லது. தேனில் நீரின் அளவு 20% கூடுதலாக தேனில் உள்ள ஈஸ்ட் செல்கள் பல்கிப் பெருகி தேனைப் புளித்துப்போக செய்து விடும். அதனால் தேன் உள்ள கொள்கலன்களை காற்று புகாத வண்ணம் இருக்கமாக மூடி வைக்க வேண்டும். தேனை கை படாமல் எடுக்க வேண்டும். ஏனெனில் தேனில் கை பட்டால் தேனில் நீரின் அளவு அதிகரித்து ஈஸ்டு செல்களால் உருவாக்கப்படும் நொதிகள் வேதியல் மாற்றம் அடைந்து ஆல்கஹால் உருவாகிறது. இதனால் தேன் புளிப்பு சுவையுடன் இருக்கும் என்று கூறினார்.
Spread the love