September 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

அங்கக வேளாண்மை

செப்.14
இந்திய வேளாண்மை சுமார் 5000 ஆண்டுகள் பழமை கொண்டது. நமது மக்கள் காலங்காலமாக நிலத்தின் தன்மைகேற்பவும் நீர் வளத்திற்கு ஏற்பவும் பலவித விவசாயம் செய்தனர். பயிர் சுழற்சியும், கலப்பு பயிரும் இருந்தது. இதோடு கால்நடைகளையும் ஒன்றாக வளர்த்தனர். மக்கள் தொகை காரணமாக உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைய வேண்டி ரசாயன உரங்கள், வீரியமில்லா விதைகள், ஓரின பயிர் சாகுபடி போன்ற முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. காலப்போக்கில் அதிக அளவு ரசாயனஉரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துதல், ஒரே பயிரை சாகுபடி செய்தல் போன்றவை இயற்கை வளங்களை குறைத்து நஞ்சுள்ள விளைபொருட்கள் உற்பத்தியாக காரணமாக இருந்தது. எனவே அங்கக வேளாண்மை என்பது இன்றைய தேவையாக உள்ளது. அங்கக வேளாண்மை என்பது பற்றியும் அதன் முக்கியத்துவம் மற்றும் பலன்கள் பற்றியும் இக்கட்டுரையில் காண்போம்.

அங்கக வேளாண்மை என்றால் என்ன?
அங்கக வேளாண் முறை இந்தியாவில் தொன்றுதொட்டு பின்பற்றப் பட்டு வரும் முறையாகும். மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் அங்கக கழிவுகளை நன்றாக மட்கச் செய்து, அவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்களை மண்ணிற்கு அளிக்கிறது. அதை பயிர்கள் கிரகித்து கொள்கின்றன. நுண்ணுயிர்கள் மெதுவாகவும் சீராகவும் ஊட்டச்சத்துக்களை வெளியிடுகின்றன. இதனால் மாசற்ற சுற்றுச்சூழலில் நல்ல மகசூலினை பெற முடிகிறது.

அமெரிக்க அங்கக வேளாண் ஆராய்ச்சி குழுவின் விளக்கப்படி அங்கக வேளாண்மை என்பது செயற்கை ஊக்கிகள் உரம், பூச்சிக்கொல்லி ஆகியவற்றை முடிந்தளவில் தவிர்த்து பயிர் சுழற்சி, இயற்கை மற்றும் அங்கக உரம் பயன்படுத்துதல் இவற்றின் மூலம் பயிர் பாதுகாப்பு மற்றும் நல்ல மண் வளம் அடைவதாகும். உணவு மற்றும் வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் கூற்றுப்படி அங்கக வேளாண்மை என்பது இயற்கையுடன் இணைந்த உயிரியல் சுழற்சி, உயிரியல் செயல்பாடுகள் அங்கக கழிவுகள் ஆகியவற்றைக் கொண்டு சுற்றுச்சூழலின் ஆரோக்கியத்தைக் காக்கும் பயிர் வளர்ப்பு முறையாகும். இயற்கை சூழலை பாதுகாக்கும் வகையிலான உழவியல், உயிரியல், இயந்திர முறைகளை பின்பற்றுதல் இதின் தனித்தன்மையாகும்.

அங்கக வேளாண்மை ஏன் தேவை?
வளர்ந்து வரும் மக்கள் எண்ணிக்கை காரணமாக, வேளாண் உற்பத்தியை நிலைப்படுத்தல் மட்டுமல்லாது அதை சீரான முறையில் உயர்த்துதலும் தற்போதைய தேவையாகிறது.
அதிக இடுபொருட்கள் மூலம் வேளாண்மையில் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தி அதன் மூலம் தன்னிறைவை அடைந்திருக்கிறோம் என்பதை விஞ்ஞானிகள் உணர்ந்துள்ளனர். ஆகையால் தாக்கமான பின்விளைவுகளைக் கொண்ட இரசாயன வேளாண் முறையை தவிர்த்து, இயற்கை ஆரோக்கியத்தை பாதுகாக்கக் கூடிய அங்கக வேளாண்மையை பின்பற்றுதல் வருங்கால சந்ததியினருக்கு நாம் செய்யும் மகத்தான சேவை என்று கூறுகின்றனர். அங்கக வேளாண் முறையில் அதிக மகசூல் பெறும் வழியினை அறிதல் மிகவும் அவசியம் என்று கருதுகின்றனர்.

அங்கக வேளாண்மையின் சிறப்பியல்புகளானது
· மண்ணின் அங்கக தன்மையை பராமரித்தல், மண் நுண்ணுயிர்களின் செயல்பாட்டினை அதிகரித்தல், கவனமாக இயந்திர ஊடுருவல் – இவைகளின் மூலம் மண்வளத்தை நீண்ட நாள் பாதுகாத்தல்.
· மறைமுகமாக பயிர்களுக்கு ஊட்டச்சத்துக்களை அங்கக கழிவுகள் வழங்கும். இவ்வூட்டச் சத்துக்களை நுண்ணுயிர்களின் உதவியால் பயிர்கள் உட்கொள்கின்றன.
நிலத்திற்கு தகுந்த பயிர் வகை உபயோகித்தல் உயிரியல் தழைச்சத்து நிலைநிறுத்தல் மற்றும் அங்கக பொருட்களின் சுழற்சிமுறை மூலமாக தழைச்சத்து தன்னிறை அடையப் பெறுகிறது.
களை, பூச்சிகளிலிருந்து பாதுகாப்பு, நோய் பாதுகாப்பு – இவை மூன்றையும் பயிர் சுழற்சி இயற்க எதிரிகள் பயன்பாடு, அளவான ரசாயன தலையீடு, எதிர்ப்பு சக்தி மிக்க பயிர்களை பயன்படுத்துதல், அங்கக எருவூட்டல் போன்றவற்றின் மூலம் அடைதல் இதன் சிறப்பாகும். இயற்கை (அங்கக) வேளாண் முறையில் கால்நடைகளுக்குக் கிடைக்கும் தீவனங்கள் நச்சின்றி இருப்பதோடு மட்டுமல்லாமல் கால்நடைகளின் கழிவுகள் வீணாகாமல் முறையாக பயன்படுத்தப்படுகிறது.

வேளாண் முறையில் கவனம் செலுத்தல் மூலம் வன வாழ்வு மற்றும் இயற்கை உறைவிடைத்தை பாதுகாத்தல் சாத்தியமாகிறது.

அங்கக வேளாண்மையின் நெறிமுறைகள்

அங்கக வேளாண்மை நான்கு நெறிமுறைகளை கொண்டது.

  1. ஆரோக்கியம்

அங்கக வேளாண்மையானது மண், செடி, விலங்கு, மனிதன் மற்றும் உலகின் ஆரோக்கியத்தை ஒருங்கிணைத்து நிலைநிறுத்தி மேம்படுத்த வேண்டும். தனி மனித மற்றும் சமூகத்தின் ஆரோக்கியமானது இந்தசுற்றுசூழலின் ஆரோக்கியத்துடன் பிணைக்கப்பட்டது என்று இந்த நெறி முறை வலியுறுத்துகிறது. வளமான மண், வளமான பயிர்களை விளைவிக்கிறது. இவை மனிதன் மற்றும் விலங்குகளின் ஆரோக்கியத்தை பேணுகிறது.

  1. சுற்றுச்சூழல்

அங்கக வேளாண்மையானது, சுற்றுப்புறசூல் மற்றும் சுழற்சிகளை சார்ந்திருக்க வேண்டும். அவற்றுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு அவற்றை நிலைநாட்ட வேண்டும். அங்கக வேளாண்மை என்றுமே சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தைக் காத்து அதனுடன் இணைந்து செயல்படுதல் வேண்டும். அங்கக மேலாண்மை, இடம், சுற்றுச்சூழல், நடைமுறை இவற்றிற்கு ஏற்றார் போல் மாறுபடும். உள்ளீடு பொருட்களின் அளவை குறைக்க மறுசுழற்சி, மறு உபயோகம் ,சிறந்தபொருள் மேலாண்மை மற்றும் சக்தி மேலாண்மையை பின்பற்றுதல் வேண்டும். இது இயற்கை மூலதனப் பொருட்களை சிக்கனமாக உபயோகிக்க உதவுகிறது.

  1. நம்பகத்தன்மை

அங்கக வேளாண்மை மற்ற உயிரினங்களுக்கு வாழ நல்லதோர் இயற்கை சூழலை அமைத்து தருவதாக இருக்க வேண்டும். உணவுப் பற்றாக்குறையை நீக்கி மக்களுக்கு தரமான வாழ்வினை அளிக்க வல்லதாக இருத்தல் வேண்டும். வருங்கால சந்ததியினருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், இயற்கை மூலதனத்தை உபயோகப்படுத்தும் முறையாக அங்கக வேளாண்மை அமைய வேண்டும்.

  1. கவனித்தல்

அங்கக வேளாண்மையை பின்பற்றுபவர்கள் உற்பத்தியின் தரத்தையும் அளவையும் அதிகப்படுத்த முயற்சிக்க வேண்டும். அம்முயற்சி பாதுகாப்பானதாகவும் சிக்கனமானதாகவும் இருத்தல் வேண்டும். இவ்வாறு செய்தல் நமது சுற்றுச்சூழலை பேணிக்காக்கவும், எதிர்கால சந்ததியினருக்கு தீங்கு விளைவிக்காததாகவும் அமையும்.

அங்கக வேளாண்மை ஏன் தேவை?

வளர்ந்து வரும் மக்கள் எண்ணிக்கை காரணமாக, வேளாண் உற்பத்தியை நிலைப்படுத்தல் மட்டுமல்லாது அதை சீரான முறையில் உயர்த்துதலும் தற்போதைய தேவையாகிறது.
அதிக இடுபொருட்கள் மூலம் வேளாண்மையில் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தி அதன் மூலம் தன்னிறைவை அடைந்திருக்கிறோம் என்பதை விஞ்ஞானிகள் உணர்ந்துள்ளனர். ஆகையால் தாக்கமான பின்விளைவுகளைக் கொண்ட இரசாயன வேளாண் முறையை தவிர்த்து, இயற்கை ஆரோக்கியத்தை பாதுகாக்கக் கூடிய அங்கக வேளாண்மையை பின்பற்றுதல் வருங்கால சந்ததியினருக்கு நாம் செய்யும் மகத்தான சேவை என்று கூறுகின்றனர். அங்கக வேளாண் முறையில் அதிக மகசூல் பெறும் வழியினைஅறிதல் மிகவும் அவசியம் என்று கருதுகின்றனர்.

அங்கக வேளாண்மையின் சிறப்பியல்கள்

மண்ணின் அங்கக தன்மையை பராமரித்தல், மண் நுண்ணுயிர்களின் செயல்பாட்டினை அதிகரித்தல், கவனமாக இயந்திர ஊடுருவல் – இவைகளின் மூலம் மண்வளத்தை நீண்ட நாள் பாதுகாத்தல். மறைமுகமாக பயிர்களுக்கு ஊட்டச்சத்துக்களை அங்கக கழிவுகள் வழங்கும். இவ்வூட்டச் சத்துக்களை நுண்ணுயிர்களின் உதவியால் பயிர்கள் உட்கொள்கின்றன.
நிலத்திற்கு தகுந்த பயிர் வகை உபயோகித்தல் உயிரியல் தழைச்சத்து நிலை நிறுத்தல் மற்றும் அங்கக பொருட்களின் சுழற்சி முறை மூலமாக தழைச்சத்து தன்னிறை அடையப் பெறுகிறது.
களை, பூச்சிகளிலிருந்து பாதுகாப்பு, நோய் பாதுகாப்பு – இவை மூன்றையும் பயிர் சுழற்சி இயற்க எதிரிகள் பயன்பாடு, அளவான ரசாயன தலையீடு, எதிர்ப்பு சக்தி மிக்க பயிர்களை பயன்படுத்துதல், அங்கக எருவூட்டல் போன்றவற்றின் மூலம் அடைதல் இதன் சிறப்பாகும். இயற்கை (அங்கக) வேளாண் முறையில் கால்நடைகளுக்குக் கிடைக்கும் தீவனங்கள் நச்சின்றி இருப்பதோடு மட்டுமல்லாமல் கால்நடைகளின் கழிவுகள் வீணாகாமல் முறையாக பயன்படுத்தப்படுகிறது. வேளாண் முறையில் கவனம் செலுத்தல் மூலம் வனவாழ்வு மற்றும் இயற்கை உறைவிடைத்தை பாதுகாத்தல் சாத்தியமாகிறது.

அங்கக வேளாண்மையின் முறைகள்
· பண்டைய மேலாண்மை முறையிலிருந்து அங்கக மேலாண்மை முறையாக மாற்றுதல்.
· பல்லுயிர் பெருக்கத்தை ஊக்குவிக்கவும் வகையில் சுற்றுச்சூழலை மேலாண்மை செய்திடல் வேண்டும்.
· மாற்று மூல காரணங்களான பயிற்சுழற்சி, பயிற்கழிவு மேலாண்மை, அங்கக எருவு உயிரியல் உள்ளீடுகள் ஆகியவற்றை கொண்டு பயிர் உற்பத்தியை மேம்படுத்த வேண்டும்.
· இயற்பியல், உயிரியல், உழவியல் முறைகளைக் கொண்டு களை மற்றும் பூச்சிகளை கட்டுப்படுத்துதல் மற்றும் மேலாண்மை செய்தல்.
· கால்நடைகளை அங்கக முறைப்படி பராமரித்து அவற்றையும் வேளாண்மையின் ஓர் அங்கமாக ஆக்குதல்.

வெற்றிகரமான அங்கக வேளாண்மை

வெற்றிகரமான அங்கக மாற்றத்திற்கான வழிமுறைகள்

பாரம்பரிய வேளாண் முறையிலிருந்து அங்கக முறைக்கு மாற பல மாற்றங்கள் தேவைப்படுகிறது. விவசாயிகளின் மன உறுதி மிகவும் முக்கியமானதாகும். இவ்வாறு மாறும் தருவாயில் பல இடையூறுகள் ஏற்பட வாய்ப்புண்டு. பாரம்பரிய முறை உடனடி தீர்வு தந்தாலும் நிரந்திர தீர்வு தருவதில்லை. அங்கக வேளாண்மையில் புதிதாக கால் பதிக்க நினைக்கும் விவசாயிகளுக்கு இதோ சில வழிமுறைகள்.

அ. அங்கக வேளாண்மையின் அடிப்படைகளை புரிதல் மற்றும் அவற்றின் தர நிர்ணயம்

அங்கக வேளாண்மை என்பது அறிவு சார்ந்த ஓர் முறை. ஆகையால் புது வரவு தரும் விவசாயிகள், உண்மை விவரங்களை கேட்டு, படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். முறையாக அளிக்கப்படும் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தங்களது தோட்டத்திலே சில முறைகளை பயனுள்ளதாக்க பயில வேண்டும். அங்கக முறை “வரும் முன் காப்போம்” என்பதை தாரக மந்திரமாகக் கொண்டது. ஆயினும் பல பிரச்சனைகளுக்கு இம்முறையில் தடுப்பு வழிகள் உண்டு என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஆ. நமக்கு உதவும் மூலதனங்களை கண்டறிதல்

தற்போது உள்ள அங்கக வேளாண் விவசாயிகள் பலர் நல்ல தரமிக்க ஆலோசனைகளை வழங்க முன் வருகிறார்கள். புதிய விவசாயிகள் ஆலோசகர்களை நிச்சயமாக அணுக வேண்டும். நல்ல ஆலோசகர்கள் விவசாயிகளின் உண்மையான நிலை மற்றும் அவர்கள் சந்திக்கக் கூடிய பிரச்சனைகளை நிச்சயம் அறிவர். ஆலோசகர் விவசாயிகளுக்கு மூலதனங்களைப் பற்றின விவரங்களை தந்து உதவுவார். அங்கக வேளாண் பற்றிய நிறைய குறிப்புகள் வளைதளங்களில் உள்ளது. புத்தகங்களாகவும் அவை கிடைக்கின்றன. வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி கூடங்களில் இதைப் பற்றின விவரங்களை சேகரிக்கலாம்.

இ. மாற்றத்தை கவனமாக திட்டமிட வேண்டும்
இலக்குகளை தெளிவாக நிர்ணயம் செய்தல் வேண்டும். கால நேரம், வரவு செலவு, விற்பனை ஆகியவற்றை முறையாக திட்டமிடல் வேண்டும். வரவு செலவுகளை திட்டமிடல் மிகவும் முக்கியம். களை அகற்றும் கருவிகள் மட்குதலுக்கு உதவும் கருவிகள், பதப்படுத்தும் கருவிகள் ஆகியவற்றின் முதலீட்டை தீர்மானித்தல் வேண்டும். அங்கக உற்பத்திக்கு தொடர் சந்தை தேவை ஏற்படுத்துதல் முக்கியமானதாகும். இது வரை உள்ள அங்கக விவசாயிகளின் ஆலோசனைகளை பெறுதல் மிகவும் நல்லது. சில நேரங்களில் பாரம்பரிய முறையை பின் பற்றுதல் அதிக நஷ்டத்தை தவிர்க்க உதவும். கால்நடை பண்ணை வைத்திருக்கும் விவசாயி, அங்கக வேளாண்மையை பின்பற்ற முயன்றால் முதலில் தனது நிலத்திற்கு தரச்சான்றிதழ் பெறுவது பரிந்துரைக்கப்படுகிறது. இவ்வாறு செய்தல் மூலம் அவர் தனது திட்டங்களை உருவாக்கவும் தீவனப் பயிர் வளர்ப்பதைப் பற்றியும் நன்கு அறியலாம். ஒரு நிலம் முழுவதுமாக அங்கக தன்மையுடையதாக மாற சில ஆண்டுகள் ஆகலாம். இவ்வாறு மாறும் பருவத்தில் ஒரு பகுதி அங்கக முறையிலும், மற்றொரு பகுதி பாரம்பரிய முறையிலும் கொண்டு செல்லப்படலாம். ஆனால் தர சான்றிதழ் வழங்குவோர் இதை அதிகமாக ஊக்குவிப்பதில்லை.

ஈ. மண் தரத்தை நன்கு புரிதல் மற்றும் அவற்றை மேம்படுத்துதல்
அங்கக வேளாண்மையில் புதிய வரவு தர விரும்பும் விவசாயி தனது மண் வளத்தை நன்கு அறிய வேண்டும். மண் வகை, ஆழம், மண் நயம், சுண்ணாம்பு நிலை, உப்பு நிலை, அங்கக கரிமம், களர் அமில நிலை, நீர் உட்புகுதிறன், ஊட்டச்சத்து அளவு, உயிரியல் செயல்பாட்டு நிலை, குறைந்த களை மற்றும் பூச்சித் தொல்லைகள் போன்றவை அங்கக தரச் சான்றிதழ் பெற உதவும்.
விவசாயி கால்நடைகள் இல்லாமல் பயிரிட திட்டமிட்டால் ஊட்டச்சத்து மூலதனத்தையும் சேர்த்து திட்டமிடல் மிகவும் அவசியமானதாகும். உதாரணத்திற்கு பாறை துகள்கள், சுண்ணாம்பு தூள், மட்கிய குப்பைகள் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

உ. அவரவர் சூழலுக்கு ஏற்ப பயிர்களையும் கால்நடைகளையும் திட்டமிடல் வேண்டும்.

ஊ. பயிர் சுழற்சி திட்டமிடல்
பயிர் சுழற்சி மூலம் பூச்சித் தொல்லைகளை தவிர்க்கலாம். களையினை கட்டுப்படுத்தலாம். அங்கக வேளாண்மையில் பயிர் சுழற்சி ஓர் முக்கிய அங்கமாகும்.

எ. பூச்சித் தாக்குதல் மற்றும் அதனை கட்டுப்படுத்தும் வழிகளை அறிதல்
தேர்ந்தெடுக்கப்பட்ட பயிரின் பிரதான பூச்சித் தொல்லைகள் மற்றும் அவற்றைக் கட்டுப்படுத்தும் வழிகளை அறிதல் மிக அவசியம். உதாரணத்திற்கு கயோலின் (மயழடin), ஸ்பைனோசாட் (ளிiழௌயன) போன்ற அங்கக பொருட்களை பயன்படுத்தலாம்.

ஏ. சொந்த பயிர் சோதனைகளை மேற்கொள்ளவும். இதன் மூலம் சிறந்த பயிர் வகையைத் தேர்வு செய்யலாம்.

ஒ. ஒவ்வொரு குறிப்புகளையும் கவனமாக பதிவேடுகளில் பதிவு செய்தல் மிகவும் அவசியம். அங்கக வெளியீட்டுப் பொருட்களின் சந்தை நிலவரம், வரவேற்பு, பதப்படுத்துதல், விநியோகம் செய்தல் ஆகியன பற்றிய முழு விபரங்களை சேகரித்தல் மற்றும் பதிவு செய்திடல் நல்ல திட்டத்தை வழி நடத்த உதவும்.

ஓ. பொதுவான தவறுகளை தவிர்க்கவும்

மாறுதலுக்குத் தேவையானவற்றை பற்றிய திட்டங்களை குறைவாக மதிப்பிடுதல்.
அங்கக வேளாண்மைக்கான முழு தேவைகளை அறிந்து கொள்ளாமை, அவற்றை குறைவாக மதிப்பிடுதல்.
வரும் முன் காக்கும் திட்டத்தின் மேல் அதிக அக்கறை கொள்ளாதிருத்தல் ஆகிய தவறுகளை தவிர்க்கவும்.

தகவல் : முனைவர் பெ. பச்சைமால், பொ. மகேஸ்வரன், எம். அருண்ராஜ், முனைவர்.கோ.ராஜாராமன், சி.சபரிநாதன், ம.ரம்யாசிவசெல்வி, சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம், தேனி.

Spread the love