யமஹா எஃப்இசட்எக்ஸ் மோட்டார் சைக்கிள் விரைவில் இந்தியச் சந்தையில் அறிமுகமாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பைக்கின் டீசர் வீடியோ 3 அசத்தலான வண்ணங்களில் இந்தப் பைக்கை வெளிப்படுத்துகிறது.
150சிசி எஃப்.இசட் பைக் வரிசையை மேம்படுத்தும் பணியில் யமஹா ஈடுபட்டுள்ளது. அத்துடன் ஒரு மாடலின் சோதனை ஓட்டம் நடைபெற்று வருவதை இணையத்தில் கசிந்த புகைப்படங்கள் வெளிப்படுத்தின. இந்தப் பைக்கானது, எக்ஸ்எஸ்ஆர் வரிசை பைக்குகளுள் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் அந்தப் பைக் எஃப்இசட்எக்ஸ் மாடலாக இருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.
எஃப்.இசட்எக்ஸ் பைக்கானது நீலம், ஆரஞ்ச் மற்றும் கருப்பு என்ற மூன்று நிறங்களில் வரவுள்ளது.
இணையத்தில் கசிந்த தகவல்களின் படி எஃப்இசட் எஃப்ஐ பைக்கைக் காட்டிலும் கூடுதலாக 30மிமீ நீளம், 5மிமீ அகலம், 35மிமீ உயரத்தைக் கொண்டுள்ளது. அத்துடன் டியர் டிராப் வடிவில் பெட்ரோல் டேங்க்கைக் கொண்டுள்ளது.
வட்ட வடிவ ஹெட்லேம்ப்களை சுற்றி அலுமினிய ப்ராக்கெட்கள் பொருத்தப்பட்டுள்ளன. பெட்ரோல் டேங்கிற்கு கீழே பூமாராங் வடிவில் ரேடியேட்டர் கிரிலைப் பெற்றுள்ளது. எஃப்.இசட் எஃப்.ஐ வி3 பைக்கில் பொருத்தப்படும் 149சிசி ஏர் கூல்டு எஸ்ஓஎச்சி என்ஜின் இந்தப் பைக்கிலும் இடம்பெற்றுள்ளது.
இந்த மோட்டார் சைக்கிளில் ரைடர்களுக்கு பயணம் சவுகரியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1 லட்சம் என்ற அளவில் இருக்கலாம்.