இந்திய கடலோர காவல்படை தகவல்
புது தில்லி, மே 10
மேற்கு மத்திய, தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள தீவிர புயலான அசானி மேற்கு மற்றும் வடக்கு திசையில் நகர்ந்து வருகிறது. இது வடக்கு மற்றும் கிழக்கு திசையில் நகர்ந்து, வடமேற்கு, வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா கரையை நோக்கி நகரும்.
தீவிர புயலை சமாளிக்க இந்திய கடலோர காவல்படை தயார் நிலையில் உள்ளது. புயல் நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருவதுடன், கப்பல்கள் மற்றும் எண்ணெய் பராமரிப்பு முகமைகளுக்கு முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு ஆலோசனைகளை வழங்கி வருகிறது. அசானி புயலால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்கவும், மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஹெலிகாப்டர்களுடன் 2 கப்பல்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
கடலில் நிறுத்தப்பட்டிருக்கும் கப்பல்கள் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன. துறைமுக அதிகாரிகள் எண்ணெய் துரப்பண இயக்குனர்கள், கப்பல்துறை, மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவ சங்கங்கள் ஆகியவற்றுக்கு புயல் நிலவரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளன.