புதிய சென்ஃபோன் 8 சீரிஸ் மொபைல்களின் அறிமுகத்தை ஒத்திவைத்துள்ளது அசுஸ் நிறுவனம்
புதிய சென்ஃபோன் 8 மினி உள்ளிட்ட 8 சீரிஸ் மொபைல்களை மே 12-ம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டிருந்தது அசுஸ் நிறுவனம். இந்த நிலையில் தற்போது இந்த மொபைல்களின் அறிமுகம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கொரோனா பரவல் காரணமாக அசுஸ் சென்ஃபோன் 8 சீரிஸ் இந்தியா அறிமுகம் பின்னர் நடைபெறும் என்றும், நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும் வரை புதிய அறிமுகங்களை மேற்கொள்ள வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் இணையத்தில் கசிந்துள்ளது.
இந்த மொபைல் 5.9-இன்ச் எஃப்எச்டி பிளஸ் டிஸ்பிளே ஆனது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டைக் கொண்டிருக்கும். மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.
அசுஸ் சென்ஃபோன் 8 மினி மாடல் ஆனது 30 வாட் ரேபிட் சார்ஜிங் வசதியைப் பெற்றிருக்கும் எனவும் தெரிகிறது.
இந்த அசுஸ் சென்ஃபோன் 8 மினி ஸ்மார்ட்போனில் சோனி ஐஎம்எக்ஸ் 686 64எம்பி கேமரா மற்றும் புதிய சோனி ஐஎம் 663 இமேஜ் சென்சார் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி சிப்செட் புராஸசருடன் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தில் செயல்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.