January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

அசோலா உற்பத்தி மற்றும் பயன்பாட்டைக் குறித்த செயல்விளக்கம்

விருதுநகர், ஜன.10

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் விவசாயிகளுக்கு அசோலா உற்பத்தி மற்றும் பயன்பாட்டைக் குறித்து செயல்விளக்கம் நடைபெற்றது.

சிவகாசி வட்டாரத்தில் உள்ள செங்கமலப்பட்டி கிராமத்து விவசாயிகளுக்கு ஊரக வேளாண் அனுபவத் திட்டத்தின் கீழ், தென்காசி மாவட்டம் வாசுதேவ நல்லூரில் உள்ள சு.தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் சபரிவாசன், லட்சுமணனன், சரவணக்கமார், பிரேம் லியா, அதுல், மோசஸ், ரேவந்த், தயாநிதி சுகந்த், கோகுல்நாத், கணபதி ஆகியோர் அசோலா உற்பத்தியின் முக்கியத்துவம் குறித்து விளக்கினர்.

இவற்றில் அசோலாவின் பயன்பாட்டால் தழை சத்தை அதிகரிக்கலாம் எனவும், அசோலாவை கால்நடை தீவனமாக பயன்படுத்தினால் கால்நடைகளுக்கு 25 முதல் 30 விழுக்காடு வரை புரதச்சத்து கிடைக்கும் எனவும், அதற்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் பீட்டாக்கரோட்டின் ஆகிய சத்துக்கள் கிடைக்கும் என்றும் கூறினர். மேலும் அசோலாவை எவ்வாறு உற்பத்தி செய்வது என்றும் விவசாயிகளுக்கு விளக்கினர்.

Spread the love