புதுக்கோட்டை, மார்ச் 31
வேளாண் மாணவர்களின் ஊரக வேளாண் பணி அனுபவ திட்டம் கீழ் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் குடுமியான்மலை கல்லூரியைச் சேர்ந்த 7 மாணவர்கள் சா.நந்தா, பா.ஹரிபிரசாத், கா.சிவசக்தி, சி.முஹம்மது மைதீன், சா.விக்னேஸ்வரன், நே.குருசரண், நா.அஜித், பேராவூரணியில் முகாமிட்டுள்ளனர். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக வேளாண் தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் மூலம் தெளிவுபடுத்தினர். கொன்றைக்காடு ஊராட்சியை சுற்றி உள்ள விவசாயிகளை அழைத்து அவர்களுக்கு அசோலாவை உற்பத்தி முறை மற்றும் அதன் பயன்களை எடுத்துரைத்தனர். மேலும் அசோலா ஆனது ஆடு, மாடு, கோழி தீவனங்கள் ஆகவும் பயன்படுத்தப்படும் முறையைப் பற்றியும் எடுத்துரைத்தனர்.
Spread the love