August 8, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

அடுத்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி 10.1 சதமாக இருக்கும்: ஐ.நா தகவல்

புது தில்லி, மே 12

அடுத்த ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 10.1 சதமாக இருக்கும் என்று ஐ.நா தெரிவித்துள்ளது.

ஐ.நா.வின் உலக பொருளாதார சூழல் மற்றும் எதிர்கால வாய்ப்புகள் அறிக்கை புதுப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்த ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதமாக இருக்கும் என்றும், அடுத்த ஆண்டு அதன் பொருளாதார வளர்ச்சி 10.1 சதமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு சீனாவின் பொருளாதார வளர்ச்சி 8.2 சதமாக இருக்கும். வரும் 2022ம் ஆண்டு அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி பின்னடைவைச் சந்தித்து 5.8 சதமாக இருக்கும் என்றும், அடுத்த ஆண்டு சீனாவை முந்திச் சென்று வேகமாக வளரும் பொருளாதாரத்தை கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கும் என ஐநா தெரிவித்துள்ளது.

Spread the love