கோவை, மார்ச் 31
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில், அடுமனைப் பொருட்கள், சாக்லேட்டுகள் மற்றும் மிட்டாய்கள் தயாரிக்கும் இரண்டு நாட்கள் பயிற்சி வருகிற 05.04.2022 மற்றும் 06.04.2022 தேதிகளில் நடைபெற உள்ளது.
அடுமனை உணவுப் பொருட்கள், சாக்லேட் மற்றும் மிட்டாய் வகைகளுக்கு தற்பொழுது மக்கள் மத்தியில், அதிக வரவேற்பு உள்ளது. அதற்கான முக்கியக் காரணம் விரும்பத்தக்க வகையிலும் பற் சுவைகளிலும் மிக எளிதில் இவை கிடைப்பதேயாகும். இந்தப்பயிற்சி சிறு தொழில் முனைவோருக்கு தங்களது வருமானத்தைப் பெருக்க பெரிதும் உதவியாக இருக்கும். ஆகவே, பயிற்சியின் போது அடுமனைப் பொருட்கள், சாக்லேட் மற்றும் மிட்டாய் வகைகள் எளிய முறையில் தயாரிப்பதற்கான தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
அவையாவன
எ ரொட்டி வகைகள்
எ கேக் மற்றும் பிஸ்கட்
எ சாக்லேட்
எ கடலை மிட்டாய்
எ சர்க்கரை மிட்டாய் வகைகள்
இத்தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் மற்றும் ஏனைய ஆர்வலர்கள் ரூ.1,500 ரூ(ரூ18% ழுளுகூ) செலுத்தி தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம்.