June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

அட்மா திட்டத்தின் கீழ் காலஜாதா உழவர் திரள் பரவலாக்கம் நிகழ்ச்சி

புதுக்கோட்டை, ஏப்.4

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டாரம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் வாயிலாக செயல்படுத்தப்படும் மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் (2021-2022) சுப்பிரமணியபுரம் மற்றும் விஜயபுரம் கிராமங்களில் மண்வள மேலாண்மை குறித்த உழவர் திரள் பரவலாக்கம் மற்றும் வேளாண்மை சார்ந்த தொழில்நுட்பங்கள் உள்ளடக்கிய காலஜாதா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அறந்தாங்கி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சி.பாஸ்கரனின் வழிகாட்டுதலின்படி வட்டார விவசாய ஆலோசனைக்குழுத் தலைவர் அரசர்குளம் கீழ்பாதியை சேர்ந்த துரைக்கன்னு (எ) குமார் தலைமை வகித்து நிழச்சியினை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் வேளாண்மைத் துறையில் செயல்படுத்தக்கூடிய திட்டங்கள், மண் மாதிரிகள் சேகரிக்கும் முறைகள் பற்றியும், மண்வளங்களை பாதுகாப்பதில் உயிர் உரங்களின் முக்கியத்துவம், மண்வள அட்டையின் அடிப்படையில் உரமிடுவது, திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள், தென்னையில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மைகள், நுண்ணீர் பாசனம் அமைப்பதினால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பாடல்கள் மற்றும் கருத்துகளை கலைநிகழ்ச்சியின் வாயிலாக விவசாய மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து மண்வள மேலாண்மைகள் குறித்து வழிப்புணர்வு பேரணி ஊர்வலம் விவசாயிகளை அழைத்துச் செல்லப்பட்டது. இவ்விழிப்புணர்வு பேரணியை வட்டார விவசாய ஆலோசனைக் குழுத் தலைவர் துரைக்கன்னு (எ) குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். இவ்வூர்வலத்தில் மண்மொழி வாசகங்கள் கோசமிட்டு செல்லப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சுப்பிரமணியபுரம் மற்றும் விஜயபுரம் ஊராட்சி மன்றத்தலைவர்கள் மற்றும் துணை தலைவர்கள், முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர், மாவட்ட கவுன்சிலர்கள், மண்ணக்குடி முன்னால் மாவட்ட கவுன்சிலர் இவர்களுடன் சுப்பிரமணியபுரம், அரசர்குளம், மண்ணகுடி, விஜயபுரம், கொடிவயல் கிராமங்களை சார்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றம் விவசாயிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறந்தாங்கி வட்டார தொழில்நுட்ப மேலாளர் சி.ரவிராஜன், மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் ராஜூ செய்யப்பட்டு கலந்து கொண்டார்கள்.

Spread the love