June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

அட்மா திட்டத்தின் கீழ் விதைப் பண்ணை விவசாயிகளுக்கு விதைச் சான்று நடைமுறைகள் குறித்த பயிற்சி

மதுரை, ஜூன் 21

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டாரத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின்க கீழ் விதைச்சான்று நடைமுறைகள் குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது. வேளாண்மை உதவி இயக்குநர் இராமசாமி, விவசாயிகளை வரவேற்று தரமான விதையின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். இப்பயிற்சியில் விதைச்சான்று நடைமுறைகள் குறித்து விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் சிங்காரலீனா, விவசாயிகளுக்கு தரமான விதை என்றால் என்ன, எவ்வாறு தரமான விதைகளை உற்பத்தி செய்வது, கருவிதை, வல்லுநர் விதை, ஆதார விதை, சான்று விதைகளுக்கான தெளிவான விளக்கம் கொடுத்து, அவ்விதைகளை வயலில் எவ்வாறு கலவன் இல்லாமல் சாகுபடி செய்வது, விதைகளின் புறத்தூய்மை மற்றும் அகத்தூய்மை மற்றும் அங்ககச்சான்று பெறும் வழிமுறைகள் பற்றி விரிவாக கூறினார். தரமான விதைகள் உற்பத்தி செய்யும் தொழில் நுட்பங்கள், சான்று விதைகளின் குணங்களான நல்ல முளைப்புத்திறன், அளவான ஈரப்பதம், போதுமான இனத்தூய்மை, குறை்நத அளவு பூச்சி மற்றும் நோய் தாக்குதல் குறித்து கலசலிங்கம் வேளாண் கல்லூரி விதை அறிவியல் உதவி பேராசிரியை செல்வராணி விளக்கமாக எடுத்துரைத்தார். விவசாயிகள் பதிவு செய்யும் விதைப்பண்ணையில் கவனிக்க வேண்டிய தொழில் நுட்பங்கள் குறித்து மதுரை விதைச்சான்று அலுவலர் முனைவர் கண்ணன் மற்றும் உசிலம்பட்டி வட்டார விதைச்சான்று அலுவலர் சௌகத் நூரியா ஆகியோர் எடுத்துரைத்தார்கள். இப்பயிற்சியில் உசிலம்பட்டி வட்டாரத்தை சேர்ந்த 40 விதைப்பண்ணை விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். பயிற்சியின் போது விவசாயிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் உதவி விதை அலுவலர்கள் சத்தியமூர்த்தி, ரகுராமன் ஆகியோர் கலந்து கொண்டனர். வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர் இந்திரா தேவி மற்றும் உதவி தொழில் நுட்ப மேலாளர் மாரிமுத்து ஆகியோர் இப்பயிற்சிக்கு ஏற்பாடுகளை செய்தனர்.

Spread the love