அரியலூர், ஜூன் 23
அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டாரம் நமங்குணம் மற்றும் நல்லாம்பாளையம் கிராமத்தில் 20.6.22 அன்று அட்மா திட்ட மாவட்டத்திற்குள்ளான விவசாயிகள் பயிற்சி வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) ஜென்சி தலைமையில் நடைபெற்றது. அவர் தனது உரையில் வேளாண்மைத் துறையில் உள்ள திட்டங்கள் பற்றியும் வேளாண் இடுபொருட்கள் மானியத்தை பற்றியும் எடுத்து கூறினார். கிரீடு வேளாண் அறிவியல் மைய தொழில் நுட்ப வல்லுநர் ராஜா ஜோஸ்லின் பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு தரிசு நில மேம்பாட்டு தொழில் நுட்பங்கள் பற்றி எடுத்து கூறினார். மானாவரி சாகுபடியில் அதிக மகசூல் பெற்றுலாபம் தரும் பயறு வகை சாகுபடியின் முக்கியத்துவம் பற்றியும் வரப்பு ஓரங்களில் உளுந்து பயிரிடுவதன் அவசியம் பற்றியும் விளக்கினார். பின்னர் அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் பழனிச்சாமி அட்மா திட்டம் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை பற்றி கூறினார். இப்பயிற்சியில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு சாகுபடி தொழில் நுட்பங்களை கேட்டறிந்தனர். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் முருகன் மற்றும் சிவா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
Spread the love