June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

அட்மா திட்டம் மூலம் மண்புழு உரம் தயாரிப்பு பயிற்சி

அரியலூர், ஜூன் 22

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டாரம், பிலாக்குறிச்சி கிராமத்தில் 22.6.22 அன்று அட்மா திட்ட மாவட்டத்திற்குள்ளான விவசாயிகள் பயிற்சி வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) ஜென்சி தலைமையில் நடைபெற்றது. அவர் தனது உரையில் வேளாண்மைத் துறையில் உள்ள திட்டங்கள் பற்றியும் வேளாண் இடுபொருட்கள் மானியத்தை பற்றியும் எடுத்து கூறினார்.

கிரீடு வேளாண் அறிவியல் மைய தொழில் நுட்ப வல்லுநர் அசோக்குமார், பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு மண் புழு உரம் தயாரிப்பு முறைகள் பற்றி எடுத்து கூறினார். மண்புழு உரத்தின் முக்கியத்துவம் மற்றும் பயிர்களுக்கு எந்த அளவு இட வேண்டும் என்ற பல யுக்திகளையும் எடுத்துரைத்தார். மேலும் வெவ்வேறு வகையான மண்புழுக்களை பற்றியும் அதன் இயல்புகளை பற்றியும் கூறினார். பின்னர் அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் பழனிச்சாமி, களைக்கொல்லி, உரங்கள் இடுவதனால் மண்புழுக்களுக்கு ஏற்படும் தீமைகள் பற்றியும் எ;வ்வாறு கையாள வேண்டும் என்பன பற்றி கூறினார் மற்றும் அட்மா திட்டம் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை பற்றி கூறினார். இப்பயிற்சியில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு சாகுபடி தொழில் நுட்பங்களை கேட்டறிந்தனர். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் முருகன் மற்றும் சிவா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

Spread the love