May 10, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

அட்ரினோ 505 ஜிபியு திறனுடன் விவோ Y12s 2021 விரைவில் அறிமுகம்

விவோ Y12s 2021 என்ற புதிய ஸ்மார்ட்போன் மாடலை விவோ நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Y12s மாடலின் அப்டேட் செய்யப்பட்ட மாடலாக புதிய ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இந்தப் புதிய ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 439 சிப்செட் மற்றும் அட்ரினோ 505 ஜிபியு புராஸசருடன் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தில் செயல்படும்.

விவோ Y12s ஸ்மார்ட்போனில் 6.51-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே, 720×1600 பிக்சல் துல்லியத்துடன் இடம்பெற்றது.

மேலும் மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட் புராஸசருடன் FuntouchOS 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தில் செயல்படக்கூடியது.

அத்துடன் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/128ஜிபி மெமரி கொண்டுள்ளது. அத்துடன் மெமரிகார்டு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா, 2எம்பி செகண்டரி கேமரா என டூயல் கேமரா உள்ளது. மேலும் 8எம்பி செல்ஃபீ கேமரா, எல்இடி பிளாஸ், செய்கை நுண்ணறிவு அம்சங்கள் இடம்பெற்றுள்ளது.

இந்த சாதனத்தில் 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. இது Phantom Black மற்றும் Glacier Blue நிறங்களில் கிடைக்கிறது. ஃபேஸ் அன்லாக், கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

விவோ Y12s சாதனத்தில் 4ஜி வோல்ட்இ, 2.4 ஜிகாஹெர்ட்ஸ் வைஃபை, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், மைக்ரோ யூ.எஸ்.பி 2.0 மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட கனெக்டிவிட்டி வசதிகளும் உள்ளன.

Spread the love