May 18, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

அண்ணாமலைப் பல்கலைக்கழக
வேளாண் புல மாணவிகளுக்கு
முதல்வர் வாழ்த்து

கடலூர், மார்ச் 9

அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊரக வளர்ச்சித் துறை மற்றும் மத்திய அரசின் தகவல் ஒளிபரப்பு துறையின் மக்கள் தொடர்பு கள அலுவலகம் இணைந்து மகளிர் தினக் கருத்தரங்கை நடத்தியது. இதில் பெண்கள் அதிகாரம், பெண்கள் மேம்பாடு என்ற தலைப்புகளில் பேச்சுப்போட்டி மற்றும் ஓவியப்போட்டி நடைபெற்றது. இப்போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் பெற்ற வேளாண் இளநிலை இறுதி ஆண்டு மாணவிகள், R.சத்தியதேவி, T.சங்கரி மற்றும் M.சரண்யா ஆகியோரை வேளாண் புல முதல்வர் முனைவர் K.R.சுந்தரவரதராஜன் பாராட்டு மற்றும் வாழ்த்து தெரிவித்தார். இந்த வேளாண் புல மாணவிகள் விரிவாக்க அனுபவ கல்வி வாயிலாக இப்போட்டிகளில் கலந்து கொள்ள ஊக்கம் மற்றும் வழிகாட்டல் வழங்கிய வகுப்பு ஆசிரியர்கள் முனைவர் தி.ராஜ் பிரவின், முனைவர் வை.பாலமுருகன் மற்றும் சே.துரைராஜ் ஆகியோருக்கும் பாராட்டு தெரிவித்தார்.

Spread the love