October 23, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

அண்ணாமலை பல்கலை வேளாண்புலம் சார்பில் மனவள மேலாண்மை ஆன்லைன் பயிற்சி

கடலூர், அக்.6

அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் புல மாணவர் நலப்பிரிவு சார்பில் யோகா மற்றும் மன வள மேலாண்மை குறித்த இணையவழி பயிற்சி பட்டறை கடந்த வாரத்தில் நடத்தப்பட்டது.

வேளாண் புல முதல்வர் மா.கணபதி பயிற்சி பட்டறையை வழிநடத்தினார். அப்போது யோகாவின் தேவை மற்றும் முக்கியத்துவம் மற்றும் அதைக் கொண்டு உடல் நலத்தையும் மன வளத்தையும் நல்ல முறையில் மேலாண்மை செய்வது குறித்தும் அவர் விளக்கிப் பேசினார்.

பயிற்சிப் பட்டறையின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் வீ.இமயவரம்பன் தனது சிறப்புரையில் யோகா மற்றும் மனவளக்கலையின் வரலாற்றுப் பின்புலம் மற்றும் இன்று உலகம் முழுவதும் யோகா மற்றும் மன வளக்கலை பரவி வளர சிதம்பரம் நகரத்தின் பங்களிப்பு பற்றியும் தற்போது நமது நாட்டின் மக்கள் தொகையை அதிகப்படியாக இளைஞர்கள் உள்ள காரணத்தினால் அவர்களின் உடல் நலம் மற்றும் மன வளத்தை யோகா மற்றும் மன வளக்கலை வாயிலாக பேணி பாதுகாப்பது நமது நாட்டின் வளர்ச்சி மற்றும் எதிர்காலத்துக்கு பெரிதும் உதவும் என்றார். பின்னர் நடைபெற்ற தொழில்நுட்ப பயிற்சியில் பேராசிரியர்கள் ஆர்.நீலகண்டன் மற்றும் பி.சுசீலா ஆகியோர் மன வேளாண்மை மற்றும் யோகா கொண்டு நல வாழ்வு வாழ்வது குறித்து விளக்கமாகப் பேசினார்.

சுமார் 500 இளநிலை மற்றும் முதுநிலை ஆராய்ச்சி மாணவர்கள் பேராசிரியர்கள் நாடு முழுவதும் இருந்து இந்தப் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டனர்.

Spread the love