June 19, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

அதிக மகசூல் தரக்கூடிய புதிய சோயாபீன் ரகம்

விஞ்ஞானிகள் உருவாக்கம்

புது தில்லி, மே 5

அதிக மகசூல் தரக்கூடிய மற்றும் பூச்சித் தாக்குதல் எதிர்ப்புத் திறன் கொண்ட புதிய சோயாபீன் விதை ரகத்தை இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். இந்தப் புதிய ரகத்திற்கு MACS 1407 என்று பெயரிடப்பட்டுள்ளது.

மேற்கு வங்கம், அஸ்ஸாம், ஜார்கண்ட், சட்டீஸ்கர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பயிரிடுவதற்கு இந்தப் புதிய ரகம் தகுந்ததாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022ம் ஆண்டு காரீப் விதைப்புக் காலத்தில் இந்த விதைகள் விவசாயிகளின் பயன்பாட்டிற்குக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 90 மில்லியன் டன் சோயாபீனை உற்பத்தி செய்தது. எண்ணெய் வித்துக்களுக்காக சோயாபீன் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

புரதம், மாட்டுத் தீவனங்கள் மற்றும் பல்வேறு பேக்கிங் செய்யப்பட்ட தீவனங்களுக்கான விலை மலிவான ஆதாரமாக சோயாபீன் உள்ளது. அதனால் சோயாபீன் உற்பத்தியில் முன்னணி நாடுகளில் ஒன்றாக மாறுவதற்கான முயற்சிகளில் இந்தியா ஈடுபட்டுள்ளது.

அதிக மகசூல் தரக்கூடிய மற்றும் பூச்சித் தாக்குதல் எதிர்ப்பு ரகங்களை உருவாக்குவது இந்த இலக்கை எட்டுவதற்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சவாலை செயல்படுத்தும் முயற்சியாக MACS-அகார்கர் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் (ARI) ஆனது தில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில் (ICAR) உடன் இணைந்து அதிக மகசூல் தரக்கூடிய சோயாபீன் ரகங்களை உருவாக்கி வருகிறது.

புனேவில் உள்ள அகார்கர் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ஆனது மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த ஒரு தன்னாட்சி அமைப்பாகும்.

பாரம்பரியமாகப் பின்பற்றப்படும் கலப்பின தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் MACS 1407 சோயாபீன் ரகத்தை உருவாக்கி உள்ளனர். இந்த ரகமானது ஹெக்டேருக்கு 39 குவிண்டால் மகசூலைத் தரும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் இந்த ரகம் அதிக மகசூல் மற்றும் நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட ரகமாக அறியப்படுகிறது.

நிலத்திலிருந்து 7 செமீ உயரத்தில் வளரக்கூடியதாகவும், உதிர்வுத் தன்மை எதிர்ப்புத் திறன் கொண்டதாகவும் இந்த ரகம் உள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

வடகிழக்கு இந்தியாவின் மழை பிடிப்புப் பகுதிகளில் இந்த ரகம் தகுந்ததாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

அங்கீகாரம் பெற்ற ரகங்களைக் காட்டிலும் 14 – 19 சதவீதம் அதிக மகசூலையும், தற்போது பயன்பாட்டில் உள்ள சிறந்த ரகத்தைக் காட்டிலும் 17 சதவீதம் அதிக மகசூலையும் மேக்ஸ் 1407 தருவதாக ARI விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இழப்பு இல்லாத மகசூலைப் பெறுவதற்கு ஜூன் 20 முதல் ஜூலை 5 வரையிலான காலம் ஏற்புடையதாக இருக்கும் என்றும், அதனால் இதர ரகங்களுடன் ஒப்பிடுகையில் பருவமழை மாறுபாடுகளைக் கடந்து அதிக பயன் தரக்கூடியதாக மேக்ஸ் 1407 இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

Spread the love