June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

அதிக விளைச்சல் பெற சான்று பெற்ற நல் விதைகளை பயன்படுத்துவீர்

தஞ்சாவூர், ஜூன் 16

சான்று பெற்ற அல்லது தரமான விதைகளின் முக்கியத்துவம் குறித்து தஞ்சை மாவட்ட விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குனர் முகமது பரூக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் பின் வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்ல லாபகரமான வேளாண்மைக்கு நல் விதை, ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு ஆகியனவாகும். இதில் தரமான விதை எனப்படுவது யாதெனில்

1.பாரம்பரிய குணங்களை கொண்டிருத்தல்,

2.அதிகபட்ச முளைப்புத் திறனை கொண்டிருத்தல்

, 3.பிற இரகங்கள் மற்றும் களைச் செடிகளின் விதைகள் இல்லாது இருத்தல்
, 4.பூச்சி நோய் தாக்கம் இல்லாமல் இருத்தல்,
5.மண் மற்றும் செடிகளின் பாகங்கள் இல்லாமல் இருத்தல்.

விதைச்சான்று துறையால் செய்யப்படும் விதைகள் மேற்கூறிய அனைத்து குணங்களை கொண்டிருக்கும்.

சான்று பெற்ற விதை எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது எனில்,

1.வல்லுநர் விதை (மஞ்சள் அட்டை பொருத்தப்பட்டது) மற்றும் ஆதார நிலை விதை (வெள்ளை அட்டை பொருத்தப்பட்டது) உபயோகித்து விவசாயியின் வயலில், உற்பத்தியாளரால் சாகுபடி செய்யப்படுகிறது
2.பயிர் பூக்கும் தருணத்திற்கு 15 நாட்கள் முன்னதாக விதைச் சான்றளிப்பு துறையில் விதை பண்ணையாக பதிவு செய்யப்படுகிறது.

3.விதைப் பண்ணை பூக்கும் தருணத்திலும், முதிர்ச்சி பருவத்திலும் விதைச்சான்று அலுவலரால் வயலில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. ஆய்வின்போது வயல் தரம் மற்றும் விதைத் தரம் குறித்து பரிந்துரைக்கப்பட்ட தரம் இருந்தால் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்ட விதைகளுக்கு சான்றளிக்கப்பட்டு அவை விற்பனைக்கு தயாராகின்றன.

4.விதைப் பண்ணையில் இருந்து விதை கொள்முதல் செய்யப்பட்டு அரசால் அங்கீகாரம் செய்யப்பட்ட விதை சுத்தி நிலையத்திற்கு அனுப்பப்படுகிறது.

5.விதை சுத்தி நிலையத்தில் சுத்திப் பணி மேற்கொள்ளப்பட்டு கழிவுகள் நீக்கி சுத்தமான ஒரேமாதிரியான சுத்தி விதைகள் பிரிக்கப்படுகிறது.

6.சுத்திகரிக்கப்பட்ட விதை குவியலில் விதை மாதிரி எடுக்கப்பட்டு விதை பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பப்படுகிறது.

7.பகுப்பாய்வில் தேறிய விதை குவியலுக்கு சான்றட்டைகள் பொருத்தப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது

ஆகவே விவசாயிகள் சான்று பெற்ற விதைகளைப் பயன்படுத்தி அதிக லாபம் பெறக் கேட்டுக் கொண்டார்.

Spread the love