August 15, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

அந்தியூர் வட்டாரத்தில் மண் புழு உரம் தயாரித்தல் பயிற்சி

ஈரோடு, ஜூன் 29

ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் மண்புழு உரம் தயாரித்தல் தொடர்பான பயிற்சி வேம்பத்தி கிராமத்தில் நடைபெற்றது. இப்பயிற்சி அந்தியூர் வேளாண்மை உதவி இயக்குநர் ஆர்.கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. துரைசாமி, உதவி பேராசிரியர், வேளாண் அறிவியல் நிலையம் மைராடா கோபி, மண்புழு படுக்கை அமைத்தல் மற்றும் மண்புழு உரம் தயாரித்தல் குறித்து மிக தெளிவாக விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். மேலும் மண்புழு உரத்தின் நன்மைகள் மற்றும் பயன்பாடுகள் குறித்து தெரிவித்தார். செந்தில் முருகன், உதவி வேளாண்மை அலுவலர், அந்தியூர், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மானியத் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு தெரிவித்தார். மேலும் இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை அந்தியூர் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சு.மணிகண்டன் மற்றும் கோ.தாமோதரன் ஆகியோர் செய்திருந்தனர். இப்பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

Spread the love