August 14, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

அந்தியூர் வட்டாரத்தில் விவசாயி களுக்கு மாடித்தோட்டம் தொடர்பான பயிற்சி

ஈரோடு, ஜூன் 30

ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் வீடு மற்றும் மாடித்தோட்டம் தொடர்பான பயிற்சி மைக்கேல்பாளையம் கிராமத்தில் 30.6.22 அன்று நடைபெற்றது. இப்பயிற்சிக்கு அந்தியூர் வேளாண்மை உதவி இயக்குநர் ஆர்.கார்த்திகேயன், தலைமையில் நடைபெற்றது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மானியத் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு தெரிவித்தார். பா.பச்சியப்பன், தோட்டக்கலை, வேளாண் அறிவியல் நிலையம், மைராடா கோபி, வீட்டுத் காய்கறி தோட்டத்தின் பயன்கள் மற்றும் இடம் இரகம் தேர்வு செய்யும் முறை பூச்சி நோய் மேலாண்மை குறித்து தெரிவித்தார். மரகதம், தோட்டக்கலை உதவி இயக்குநர், வீட்டு காய்கறி தோட்ட மேலாண்மை மற்றும் பயிரிடும் முறை நீர் பாசனம் உர நிர்வாகம் மற்றும் தங்கள் துறை சார்ந்த மானியத் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு தெரிவித்தார். நாகராஜன் விதை சான்று அலுவலர், விதை தேர்வு செய்வது விதை மாதிரி எடுப்பது விதை சேமிப்பு விதை சுத்தகரிப்பு நிலையம் பற்றியும் விவசாயிகளுக்கு தெரிவித்தார். மேலும் இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை அந்தியூர் உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் சு.மணிகண்டன் மற்றும் கோ.தாமோதரன் ஆகியோர் செய்திருந்தனர். இப்பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

Spread the love