புது தில்லி, ஏப்.26
தனது கார் மாடல்கள் விலை அதிரடியாக மாற்றப்பட்டுவிட்டதாக போர்டு நிறுவனம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து விரிவான செய்தியாவது:
போர்டு இந்தியா நிறுவனம் பிகோ, ஆஸ்பையர், பிரீஸ்டைல், இகோஸ்போர்ட் மற்றும் என்டேவர் மாடல்கள் விலையை உயர்த்தி இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த விலை உயர்வு வரும் இந்த மாதம் முதல் அமலாகி இருக்கிறது.
இகோஸ்போர்ட் காம்பேக்ட் எஸ்யுவி டைட்டானியம் பிளஸ், எஸ்இ மற்றும் எஸ் வேரியண்ட்கள் தவிர அனைத்து வேரியண்ட்களின் விலையும் ரூ.20 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.
அதன் அடிப்படையில் இகோஸ்போர்ட் பெட்ரோல் மாடல் விலை ரூ. 8.19 லட்சம் என்றும் டீசல் மாடல் விலை ரூ. 8.89 லட்சம் என மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிகோ மற்றும் பிரீஸ்டைல் மாடல்கள் விலை ரூ. 18 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. விலை உயர்வு அனைத்து வேரியண்ட்களுக்கும் பொருந்தும். இரு மாடல்களிலும் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. பிளாக்ஷிப் புல்-சைஸ் எஸ்யுவியான என்டேவர் மாடல் டைட்டானியம் பிளஸ் 4×2 ஏடி விலை ரூ. 70 ஆயிரமும், டைட்டானியம் பிளஸ் 4×4 ஏடி மற்றும் ஸ்போர்ட் 4×4 ஏடி வேரியண்ட்கள் விலை ரூ. 80 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. ஆஸ்பையர் மாடல் விலை ரூ. 3 ஆயிரம் உயர்த்தப்பட்டு உள்ளது.