August 14, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

அனைத்து பயிர்க்கும் அற்புத பலன் தரும் மண்புழு குளியல் நீர்

மண்வளம் பெருகிட மண்புழுக்கள் பெரிதும் உதவுகின்றன. இவை கிடைத்த பயிர் கழிவுகளை உண்டு நன்மை செய்யும் உரமாக்குவது நாம் அறிந்ததே. பயிர் வளர ஊக்கியாக செயல்பட மண்புழுக்களின் உடலின் வெளிப்புறம் ஈரமாக வைத்திருக்க அவை வியர்வை போன்ற திரவத்தை மெதுவாக வெளியிடுகின்றன. இந்த திரவத்தை சேகரித்து பயன்படுத்தும் உத்திதான் மண்புழுக் குளியல் நீர் தயாரித்தல் ஆகும். அதற்கு ஆங்கிலத்தில் வெர்மிவாஷ் என்று பெயர்.

மண்புழுவை ஒரு தொட்டியில் அல்லது பானையில் வளர்த்து அதன் அடியில் சிறுதுளைகள் மூன்று அல்லது நான்கு இட வேண்டும். இதன் மூலம் நீர் வழியும் வண்ணம் செய்ய முடியும்.
மண்புழு உள்ள பானைக்கு மேல்புற நீர் நிரம்பிய கலயம் அமைத்து அதில் ஒரு லிட்டர் நீரை ஊற்ற வேண்டும். அதற்கு முக்காலி போல மூன்று கம்புகளை கட்டி தொங்க வைத்து சிறு துளை ஏற்படுத்தி சொட்டு சொட்டாக வரவிட வேண்டும்.

ஒரு இரவு முழுவதும் இவ்வாறு சொட்டுச்சொட்டாக விழும் நீரானது மண்புழுவின் உடலை நனைக்கும். அது பானையின் அடிப்புறமாக துளைகள் வழியே மண்புழுக் குளியல் நீர் எனப்படும் வெர்மி வாஷ் என்பது ப்ரவுன் நிறத்தில் டீத் தண்ணீர் மாதிரி உள்ள நீராகும். பானைக்கு அடியில் வேறு பாத்திரத்தை வைத்து சேகரித்து பயன்படுத்தலாம். அதாவது ஒரு லிட்டர் குளியல் நீரை 9 லிட்டர் நீரில் கலந்து செடிகளுக்கு அடியில் உறிஞ்சு குழல் மூலம் ஊற்றியும், இலை வழியாக தெளித்தோ அல்லது சொட்டு நீர் பாசன முறையில் வென்சுரி எனும் நீரில் கரைத்தும் அனுப்பலாம். காய்கறிகள், பழங்கள், மலர்கள் உற்பத்தியில் கூடுதல் மகசூல் பெற்று நல்ல லாபம் பெறலாம். பானை வாங்கி புழுவைப் பிடித்து நீர் செலுத்தி குளியல் நீரை தயாரிக்க முடியாதவர்கள் தனியார் வசம் வாங்கியும், பயன்படுத்துவது நல்லது. காய்கறிகள், பழங்கள், தென்னை மலர்கள், மலைத்தோட்டப்பயிர்கள் எல்லாம் நல்ல மகசூல் தர மண்புழுக் குளியல் நீரை பிரதி மாதம் தெளிப்பது நல்லது.

தகவல் : டாக்டர் பா.இளங்கோவன், வேளாண்மை இணை இயக்குநர், காஞ்சிபுரம், மேலும் விபரம் பெற அலைபேசி எண். 98420 07125 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Spread the love