May 10, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

அன்னியச் செலாவணி கையிருப்பு கடந்த வாரத்தில் மேலும் உயர்வு

செய்திப்பிரிவு

நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு மதிப்பானது ஏப்.23ம் தேதியுடன் முடிவடைந்த கடந்த வாரத்தில் உயர்ந்துள்ளது.

கணக்கீட்டு வாரத்தில் 1.7 பில்லியன் டாலருக்கு மேல் உயர்ந்துள்ளது. தொடர்ச்சியாக இரண்டு வாரங்கள் சரிவைச் சந்தித்த பின்பு மீண்டும் தொடர்ச்சியாக 3 வாரங்கள் உயர்வு கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நவ.27ம் தேதிக்குப் பின்பு அன்னியச் செலாவணி கையிருப்பு ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. முன்னதாக நவ.20ம் தேதியுடன் முடிவடைந்த 3 வாரங்களில் மட்டும் 15 பில்லியன் டாலர் உயர்ந்தது.

அன்னியச் செலாவணி கையிருப்பு மதிப்பானது 23 வாரங்கள் தொடர்ச்சியான உயர்வுக்குப் பின்பு மார்ச் 13ம் தேதி மற்றும் 20ம் தேதியுடன் முடிவடைந்த இரண்டு வாரங்களில் 17 பில்லியன் டாலர் அளவுக்கு குறைந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பின்பு படிப்படியாக மீண்டும் உயர்வு கண்டு 590 பில்லியன் டாலரைக் கடந்தது. அதன்பின்பு மீண்டும் ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.

கடந்த ஏப்.23ம் தேதியுடன் முடிவடைந்த கணக்கீட்டு வாரத்தில் நாட்டின் மொத்த அன்னியச் செலாவணி கையிருப்பு மதிப்பு 1.701 பில்லியன் டாலர் உயர்ந்து 584.1 பில்லியன் டாலராக உள்ளது.

முந்தைய ஏப்.16ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அன்னியச் செலாவணி கையிருப்பு 582.406 பில்லியன் டாலராக இருந்தது.

முந்தைய ஏப்.9ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அன்னியச் செலாவணி கையிருப்பு மதிப்பு 581.21 பில்லியன் டாலராகவும், ஏப்.2ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 576.86 பில்லியன் டாலராகவும் இருந்தது.

முந்தைய மார்ச் 26ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 579.82 பில்லியன் டாலராகவும், மார்ச் 19ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 582.27 பில்லியன் டாலராகவும், மார்ச் 12ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அன்னியச் செலாவணி கையிருப்பு மதிப்பு 582.03 பில்லியன் டாலராகவும், மார்ச் 5ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 580.29 பில்லியன் டாலராகவும் இருந்தது.

முந்தைய பிப்.26ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அன்னியச் செலாவணி கையிருப்பு மதிப்பு 584.55 பில்லியன் டாலராகவும்,ஜன.29ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 590.18 பில்லியன் டாலராகவும் இருந்தது.

ஒட்டு மொத்த அன்னியச் செலாவணி கையிருப்பில் பெரிய அளவிலான பங்கு வகிக்கும் அன்னிய நாணயச் சொத்து மதிப்பானது கணக்கீட்டு வாரத்தில் 1.062 பில்லியன் டாலர் உயர்ந்து 541.64 பில்லியன் டாலர் என்ற அளவில் உள்ளது. எனினும் டாலர் தவிர்த்த இதர நாணய மதிப்பிலான தொகைகள், பங்குகள் மற்றும் பத்திரங்களின் மதிப்பு, மொத்த சொத்து மதிப்பில் 20-30 சதம் என்ற அளவில் மட்டுமே உள்ளது.

கடந்த ஏப்.23ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் தங்கம் கையிருப்பு மதிப்பு 615 மில்லியன் டாலர் உயர்ந்து 35.96 பில்லியன் டாலராக உள்ளது.

கணக்கீட்டு வாரத்தில் இந்தியாவின் சிறப்பு எடுப்பு உரிமமானது 7 மில்லியன் டாலர் உயர்ந்து 1.505 பில்லியன் டாலராகவும், மேலும் சர்வதேச நிதியத்தில் உள்ள காப்பு நிதி 18 மில்லியன் டாலர் உயர்ந்து 4.987 பில்லியன் டாலராகவும் உள்ளது.

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விபரங்களில் இந்தத் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

Spread the love