September 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

அன்னியச் செலாவணி கையிருப்பு புதிய உச்சத்தை எட்டியது

640 பில்லியன் டாலரைக் கடந்தது

தங்கம் இருப்பு மதிப்பும் உயர்வு

செய்திப்பிரிவு

நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு மதிப்பானது கடந்த செப்.3ம் தேதியுடன் முடிவடைந்த கடந்த வாரத்தில் இதுவரை இல்லாத உச்ச அளவை எட்டியுள்ளது.

தொடர்ச்சியாக இரண்டு வாரங்கள் சரிவிற்குப் பின்பு மீண்டும் இரண்டு வாரங்கள் உயர்வு கண்டுள்ளது. இந்த இரண்டு வாரங்களில் மொத்த அன்னியச் செலாவணி கையிருப்பு மதிப்பு 25 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது.

கணக்கீட்டு வாரத்தில் அன்னிய நாணய சொத்து மதிப்பு கணிசமாக அதிகரித்ததை அடுத்து அன்னியச் செலாவணி கையிருப்பும் அதிகரித்துள்ளது.

10 வாரங்கள் தொடர் உயர்வுக்குப் பின்பு, ஜூன் 18ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அன்னியச் செலாவணி மதிப்பு சரிவு கண்டது. முந்தைய 10 வாரங்களில் 30 பில்லியன் டாலர் அளவுக்கு அன்னியச் செலாவணி உயர்ந்தது. அதற்குப் பின்பு நான்கு வாரங்களில் தொடர்ச்சியாக உயர்வு கண்டது. பின்பு ஜூலை 23ம் தேதி முடிவடைந்த வாரத்தில் சரிவு கண்டது.

அன்னியச் செலாவணி கையிருப்பு மதிப்பானது 23 வாரங்கள் தொடர்ச்சியான உயர்வுக்குப் பின்பு மார்ச் 13ம் தேதி மற்றும் 20ம் தேதியுடன் முடிவடைந்த இரண்டு வாரங்களில் 17 பில்லியன் டாலர் அளவுக்கு குறைந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பின்பு படிப்படியாக மீண்டும் உயர்வு கண்டு 610 பில்லியன் டாலரைக் கடந்தது.

கடந்த செப்.3ம் தேதியுடன் முடிவடைந்த கணக்கீட்டு வாரத்தில் நாட்டின் மொத்த அன்னியச் செலாவணி கையிருப்பு மதிப்பு 8.895 பில்லியன் டாலர் உயர்ந்து 642.453 பில்லியன் டாலராக உள்ளது.

முந்தைய ஆக.27ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அன்னியச் செலாவணி கையிருப்பு மதிப்பு 633.558 பில்லியன் டாலராகவும், ஆக.20ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அன்னியச் செலாவணி கையிருப்பு மதிப்பு 616.895 பில்லியன் டாலராகவும், ஆக.13ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 619.365 பில்லியன் டாலராகவும், ஆக.6ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 621.464 பில்லியன் டாலராகவும் இருந்தது.

ஜூலை 2ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அன்னியச் செலாவணி 610.012 பில்லியன் டாலராகவும், ஜூன் 4ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 605.008 பில்லியன் டாலராகவும், மே 7ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 589.465 பில்லியன் டாலராகவும், ஏப்.2ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 576.86 பில்லியன் டாலராகவும், மார்ச் 5ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 580.29 பில்லியன் டாலராகவும், ஜன.29ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 590.18 பில்லியன் டாலராகவும் இருந்தது.

ஒட்டு மொத்த அன்னியச் செலாவணி கையிருப்பில் பெரிய அளவிலான பங்கு வகிக்கும் அன்னிய நாணயச் சொத்து மதிப்பானது கணக்கீட்டு வாரத்தில் 8.213 பில்லியன் டாலர் உயர்ந்து 579.81 பில்லியன் டாலர் என்ற அளவில் உள்ளது. எனினும் டாலர் தவிர்த்த இதர நாணய மதிப்பிலான தொகைகள், பங்குகள் மற்றும் பத்திரங்களின் மதிப்பு, மொத்த சொத்து மதிப்பில் 20-30 சதம் என்ற அளவில் மட்டுமே உள்ளது.

கடந்த செப்.3ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் தங்கம் கையிருப்பு மதிப்பு 642 மில்லியன் டாலர் உயர்ந்து 38.083 பில்லியன் டாலராக உள்ளது.

கணக்கீட்டு வாரத்தில் இந்தியாவின் சிறப்பு எடுப்பு உரிமமானது 29 மில்லியன் டாலர் உயர்ந்து 19.437 பில்லியன் டாலராகவும், மேலும் சர்வதேச நிதியத்தில் உள்ள காப்பு நிதி 11 மில்லியன் டாலர் உயர்ந்து 5.121 பில்லியன் டாலராகவும் உள்ளது.

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் இந்தத் தகவல்கள் தெரியவருகிறது.


Spread the love