மும்பை, ஏப்.20
பேடிஎம் நிறுவனம் தொடர்ந்து பல முதலீட்டு சேவைகளைத் தனது பேடிஎம் மனி வாயிலாக அளித்து வரும் நிலையில், பங்குச்சந்தை முதலீட்டாளர்களையும், இளம் டெக் முதலீட்டாளர்களையும் ஈர்க்கும் விதமாக அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களில் முதலீடு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்திய ரீடெய்ல் முதலீட்டாளர்களுக்காகவே பிரத்தியேகமாகப் பேடிஎம் நிறுவனம் தனது பேடிஎம் மனி தளத்தின் வாயிலாக மீரே அசட் NYSள FANG+ ளFT உடன் கூட்டணி வைத்து அமெரிக்க நிறுவனங்களில் முதலீடு செய்யும் வாய்ப்பை அளிக்கிறது.
மேலும், அமெரிக்கப் பங்குச்சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் பேஸ்புக், அமேசான், நெட்பிளிக்ஸ், கூகுள் போன்ற முன்னணி டெக் நிறுவனங்கள் அடங்கிய FANG+ பிரிவு நிறுவனங்கள் அடுத்த 10 வருடத்தில் மிகப்பெரிய அளவிலான வளர்ச்சியை அடையும் எனக் கருதப்படும் நிலையில் இந்த நிறுவனங்களில் முதலீடு செய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
பேடிஎம் நிறுவனத்தின் இப்புதிய சேவையின் மூலம் முதலீட்டாளர்கள் ளTF வாயிலாக FANG++ பேஸ்புக், அமேசான், நெட்பிளிக்ஸ், கூகிள், ஆப்பிள், அலிபாபா, பைய்டூ, நிவிடா, டெஸ்லா, டிவிட்டர் ஆகிய நிறுவனத்தில் முதலீடு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேடிஎம் மணி நிர்வாக இயக்குநுர் ஸ்ரீதர் இது குறித்து தெரிவித்துள்ளதாவது: இந்தியாவில் ளTF முதலீடுகள் நீண்ட காலமாகப் பயன்பாட்டில் இருக்கும் நிலையில் கடந்த 3 வருடத்தில் சராசரியாக 40% CAGR வளர்ச்சியைப் பதிவு செய்து வரும் காரணத்தால் இந்திய ரீடைல் முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக இது இருக்கும் என நம்புகிறோம் என தெரிவித்துள்ளார்.