October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

அமைச்சர் எ.வ.வேலு-நிதின் கட்கரி சந்திப்பு – தமிழகத்தில் செயல்படுத்தப்பட வேண்டிய தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் குறித்து ஆலோசனை

புது தில்லி, அக்.12

தமிழக பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, புது தில்லியில் டிரான்ஸ்போர்ட் பவனில்’ மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரியை நேரில் சந்தித்து, தமிழகத்தில் செயல்படுத்தப்பட வேண்டிய தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் குறித்து விவாதித்தார்கள்.

இந்த விவாதத்தின் போது, திருவண்ணாமலை-கள்ளக்குறிச்சி சாலை, வள்ளியூர்-திருச்செந்தூர் சாலை, கொல்லேக்கால்-கனூர் சாலை, பழனி-தாராபுரம் சாலை, ஆற்காடு-திண்டிவனம் சாலை, மேட்டுப்பாளையம்-பவானி சாலை, அவிநாசி-மேட்டுப்பாளையம் சாலை மற்றும் பவானி-கரூர் சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக அறிவிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.

சென்னை துறைமுக வளர்ச்சிக்கும், பெருகி வரும் நகர போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கும், சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரை 2-அடூக்கு உயர்மட்ட சாலை பணியினை தொடங்க வேண்டியதின் அவசியம் குறித்து மத்திய அமைச்சரிடம் எடுத்துரைத்தார்.

மதுரை மேற்கு சுற்றுவட்டச் சாலை கோயம்புத்தூர் அரைவட்டச் சாலை, கோயம்புத்தூர்-சத்தியமங்கலம் சாலை ஆகியவற்றிற்கான விரிவான திட்ட அறிக்கையினை விரைவுப்படுத்தி விரைவில் பணி தொடங்க கேட்டுக் கொண்டார்கள்.

நான்கு வழிச்சாலையாக உள்ள சேலம்-உளுந்தூர்பேட்டை சாலையில் 8-புறவழிச்சாலைகள் மட்டும், இருவழிச்சாலையாக இருப்பதால் விபத்துகள் அதிகமாக நடைபெறுவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அதனால், சலம்- உளுந்தூர்பேட்டை சாலையில் உள்ள புறவழிச்சாலையை 4- வழிச்சாலையாக மேம்பாடு செய்யவும் மற்றும் நான்கு வழிச்சாலையாக உள்ள சென்னை-கன்னியாகுமரி சாலையினை 8/6 வழிச்சாலையாக மேம்படுத்தவும் கோரினார்.

மேலும், தற்போதைய, இருவழிச்சாலையாக உள்ள கோயம்புத்தூர் புறவழிச்சாலையில் 2011-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை, 391-விபத்துகள் ஏற்பட்டதை விளக்கிக்கூறி, 4-வழிச் சாலையாக மேம்படுத்த வேண்டுமென்பபதை வலியுறுத்தினார்.

தற்போதுள்ள, மக்கள் தொகை அடர்த்தி, வாகனங்களின் எண்ணிக்கை உயர்வு ஆகியவற்றின் காரணமாக தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை போக்குவரத்து நெரிசல் அதிகமாகி விபத்துகளும் ஏற்படக்கூடிய சூழ்நிலை உள்ளது. இதனால், தாம்பாம் முதல் செங்கல்பட்டு வரை உயர்மட்ட சாலை அமைக்க வேண்டுமென்பது குறித்து விரிவாக ஒன்றிய அமைச்சரிடம் விளக்கிக் கூறினார்கள்.

திருச்சி முதல் துவாக்குடி வரை குறைவான நில எடுப்புடன் 15 கி.ம். நீளத்திற்கு ரூ.1500 கோடி மதிப்பில் உயர்மட்ட சாலை அமைக்கலாம். உயர்மட்ட சாலை அமைப்பது விபத்துகளை தடுப்பதுடன், கனரக வாகனப் போக்குவரத்து மற்றும் உள்ளூர் வாகனப் போக்குவரத்திற்கு நிரந்தா தீர்வாக அமையும். மேலும், கனரக வணிக வாகனங்கள் கட்டுமானங்கள் நிறைந்த பகுதிகளில் நுழையாமல், உயர்மட்ட சாலையை பயன்படுத்தி விரைவாக செல்லலாம் என்பதையும் ஒன்றிய அமைச்சர் அவர்களிடம் எடுத்துரைத்தார்கள்.

இக்கோரிக்கைகள் தொடர்பாக, தனித்தனியாக ஒவ்வொரு கோரிக்கை குறித்தும், ஒன்றிய அமைச்சர் அவர்களிடம் கடிதங்களை கொடுத்து, அனைத்து கோரிக்கைகளையும் விரைவில் நிறைவேற்ற வேண்டுமென கேட்டுக் கொண்டார்கள். ஒன்றிய அமைச்சர் திரு.நிதின் கட்காரி அவர்கள், தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் கோரிக்கைகள் அனைத்தையும் பரிசீலிப்பதாகவும், விரைவில் ஆணைகள் பிறப்பிப்பதாகவும் தெரிவித்தார்.

Spread the love