October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலையத்தில் கண்காணிப்புக்குழு ஆய்வு

திருநெல்வேலி, அக்.11

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலையத்தில் ஏ.டி.டீ53 நெல் இரகத்திற்கான கண்காணிப்புக் குழுவின் முதல் ஆய்வு திருநெல்வேலி மாவட்ட விதைச் சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் சுரேஷ், தலைமையிலான விதைச்சான்று அலுவலர்கள் அடங்கிய குழுவால் மேற்கொள்ளப்பட்டது. ஏடிடீ 53 நெல் 110-115 நாள் வயது கொண்ட ஒரு குறுகிய கால சன்ன நெல் இரகம் ஆகும். வல்லுநர் விதையே விதைப்பெருக்கத்தில் முதல் நிலையாக கருதப்படுகிறது. இந்த வல்லுநர் விதையிலிருந்து தான் ஆதாரநிலை விதைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆதார நிலை விதைகளிலிருந்து சான்று நிலை விதைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கண்காணிப்புக்குழு ஆய்வில் இரகத்தின் தாயாதி குணாதிசியங்கள் கொண்டு விதைப்பண்ணையின் இனத்தூய்மை ஆய்வு செய்யப்பட்டது. பிற இரகக் கலவன்கள் உள்ளனவா எனவும், வளர்ச்சி சார்ந்த மற்றும் சூழல் சார்ந்த வேறுபாடுகள் காணப்படுகின்றவா எனவும் ஆய்வு செய்யப்பட்டது.

இந்த ஆய்வில் அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் ஆறுமுகச்சாமி மற்றும் பேராசிரியர்கள் முனைவர் தங்கப்பாண்டியன் மற்றும் முனைவர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் விதைச்சான்று அலுவலர்களான திருமலைக்குமார், சண்முகையா, ஆகியோரும் ஆய்வில் கலந்து கொண்டனர்.

Spread the love