May 17, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

அம்போடெரிசின்-பி மருந்து அதிகளவில் கிடைக்க நடவடிக்கை

The Union Minister for Health & Family Welfare, Science & Technology and Earth Sciences, Dr. Harsh Vardhan chairing the 26th meeting of the high-level Group of Ministers (GoM) on COVID-19, through video conferencing from Nirman Bhawan, New Delhi on May 17, 2021.

புது தில்லி, மே 18

பூஞ்சை தொற்று மருந்து “அம்போடெரிசின்-பி’ அதிகளவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கோவிட்-19 குறித்த அமைச்சர்கள் குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

கோவிட்-19 குறித்த அமைச்சர்கள் குழுவின் 26வது கூட்டத்துக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தலைமை தாங்கினார். இதில் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர். எஸ். ஜெய்சங்கர், சிவில்விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி, கப்பல் போக்குவரத்து துறை இணையமைச்சர் மன்சுக் மாண்டவியா, உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய், சுகாதாரத்துணை

இணையமைச்சர் அஸ்வினி குமார் சவுபே, நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வினோத் கே பால் ஆகியோர் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டனர்.

கோவிட் சிகிச்சைக்கு 2-டிஜி மருந்தை பாதுகாப்புத்துறை விஞ்ஞானிகள் உருவாக்கியதை டாக்டர் ஹர்ஷ் வர்தன் பாராட்டினார். கோவிட்டுக்கு எதிரான நடவடிக்கையில் இந்த மருந்து பெரும் மாற்றத்தை

ஏற்படுத்தும் என அவர் கூறினார். இன்சாகாக் நெட்வொர்க்கில் தற்போது நாடு முழுவதும் 10 பரிசோதனைக் கூடங்கள் உள்ளன. பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்த நெட்வொர்க்கில் 17 புதியபரிசோதனை கூடங்கள் இணைக்கப்படவுள்ளதாக, மத்திய அமைச்சர்களிடம் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.

மியூகோ மிகோசிஸ் எனப்படும் பூஞ்சை தொற்றுக்கு சிகிச்சை அளிக்க பயன்படும் அம்போடெரிசின்-பி மருந்தின் தேவை அதிகரித்துள்ளதாக மருந்துகள் துறை செயலாளர் எஸ்.அமர்னா இந்தகூட்டத்தில்சுட்டிக் காட்டினார். இவற்றை விநியோகிக்கும் 5 நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இவற்றை உகந்த முறையில் ஒதுக்கீடு செய்வதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன. கோவின் தளம்,அடுத்த வாரத்துக்குள் இந்தி உட்பட 14 மாநில மொழிகளில் பயன்படுத்த முடியும் என இந்த கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார்.

Spread the love