September 20, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

அரசினர் மாணவ மாணவியர் விடுதிகளில் ஆட்சியர் ஆய்வு

நாமக்கல், செப்.9

தமிழக முதல்வரின் பொதுமக்களின் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை உடனுக்குடன் செயல்படுத்தி வருகின்றார்கள். மேலும் மாணவ மாணவியர்களின் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். அந்த வகையில் 01.09.2021 அன்று முதல் பள்ளிகள் கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கியுள்ளார்கள்.

நாமக்கல் மாவட்டத்தில் 39 ஆதிதிராவிடர் மற்றும் 28 பிற்படுத்தபட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தபட்டோர் நல மாணவ மாணவியர்கள் விடுதிகள் இயங்கி வருகின்றது. நாமக்கல் மாவட்டம் வேலக்கவுண்டம்பட்டியில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தபட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தபட்டோர் நல அரசினர் மாணவ மாணவியர் விடுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் விடுதிகளில் மாணவ மாணவியர்களுக்கு தரமான சத்தான உணவு வழங்கப்படுகிறதா என்றும் சுத்தமான குடிநீர் வழங்கப்படுகிறதா என்றும் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து மாணக்கார்களை பாதுகாக்கும் வகையில் அறைகள் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளதா என்றும் படுக்கை வசதிகள் குறித்தும் கழிப்பிடம் தூய்மையாக உள்ளதா என்றும் போதிய பாதுகாப்பு வசதிகள் குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் விடுதி காப்பாளார்களிடம் மற்றும் மாணவ மாணவியர்களிடம் அடிப்படை வசதிகள் குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது விடுதி காப்பாளர் மற்றும் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Spread the love