July 25, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

அரசு மின்வாரிய ஊழியர்களுக்கும் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்

சென்னை, ஜூலை 22

அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், மின்வாரிய ஊழியர்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு, ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இக்காப்பீட்டுத் திட்டம், 2025ம் ஆண்டு, ஜூலை 30-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அத்திட்டம் மின்வாரிய ஊழியர்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகச் செயலர் பிறப்பித்த உத்தரவில், மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர், ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீட்டுத் தொகை மூலம் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.

அரிய வகை சிகிச்சைகள், அறுவை சிகிச்சை மேற்கொள்வோர், ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை காப்பீட்டுத் தொகை மூலம் சிகிச்சை பெறலாம். இதற்காக ஊழியர்களிடமிருந்து மாதம் ரூ.300 வசூலிக்கப்படும். இந்த காப்பீட்டுத் திட்டம் ஒப்பந்த ஊழியர்களுக்குப் பொருந்தாது என அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love