தமிழகம் முழுவதும் ஒவ்வொரு பகுதியிலும் விளைவிக்கப்படும் உணவு பொருட்கள் மற்றும் உற்பத்தி செய்யப்படுகின்ற பிரபலமான பொருட்களை பிற பகுதியில் வியாபாரத்துக்காக கொண்டு செல்ல தற்போது அரசு விரைவு பேருந்துகளில் குறைந்த கட்டணத்தில், காலம் விரையமின்றி கொண்டு செல்ல தமிழகத்திலுள்ள 1,110 பேருந்துகளில், பேருந்தின் பக்கவாட்டில் 2 சுமைப் பெட்டியும் பின்னால் ஒரு சுமைப் பெட்டி (LUGGAGE CHAMBER) என 3 பெட்டி உள்ளது. சிறு / மிகச் சிறு விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், சிறிய வணிகர்கள் தங்களது பொருட்களை இந்த விரைவு பேருந்து மூலமாக தமிழகம் முழுக்க கொண்டு செல்லும் வாய்ப்பை ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
மாத வாடகை அல்லது தினசரி வாடகையில் 80 கிலோ அளவுள்ள பொருட்களை கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தங்களுடைய பகுதியில் விளைகின்ற விரைவாக அழுகு கூடிய பொருட்களை கொண்டு செல்ல இது மிக வசதியாக இருக்கும். இது போல விரைவு தபால் சேவை COURIER SERVICE வசதியும் உள்ளது. தமிழகம் முழுவதும் கொண்டு செல்ல 250 கிராம் எடையுள்ள தபால் சேவைக்கு 50 ரூபாயாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதே போல பிற மாநிலங்களுக்கு 75 ரூபாயாக வசூலிக்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு சம்மந்தப்பட்ட ஊரில் உள்ள போக்குவரத்து அலுவலகத்தை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம்.