January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

அரபிக் கடலில் தாக்டே புயல் 2021ல் முதல் புயல் கேரளாவை தாக்கும்

புது தில்லி, மே 12

நடப்பாண்டின் முதல் புயல் அரபிக் கடலில் வரும் 14ம் தேதி உருவாக வாய்ப்புள்ளது என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : வரும் 14ம் தேதி காலை தென்கிழக்கு அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இது வடக்கு வடமேற்கு நோக்கி நகரக்கூடும். லட்சத்தீவை ஒட்டிய பகுதிகளில் தாழ்வு பகுதி மேலும் வலுவடைய வாய்ப்புள்ளது. இதன்மூலம் லட்சத்தீவுகள், கடலோர கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பலத்த மழை பெய்யும்.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 16ம் தேதி கிழக்கு மத்திய அரபிக் கடலில் வலுவடைந்து புயலாக மாற வாய்ப்புள்ளது. அதன்பின் வடக்கு வடமேற்கு திசையில் தொடர்ந்து நகரும். குஜராத் மற்றும் பாகிஸ்தானுக்கு இடைப்பட்ட பகுதியில் கரையைக் கடக்கலாம். தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் 14ம் தேதி வரை மணிக்கு 50 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். இந்த புயல் உருவாகும் பட்சத்தில் நடப்பாண்டின் முதல் புயலாக கருதப்படும். இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Spread the love