July 25, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

அரிய வகை பழப்பயிர்கள் சாகுபடிக்கு மானியம்

கிருஷ்ணகிரி, ஜூலை 21

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேசிய வேளாண்மை திட்டத்தின் கீழ் அரிய வகை பழப்பயிர், காய்கறி சாகுபடி செய்ய மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிகழாண்டு அரிய வகை பழங்களான அத்தி, டிராகன் பழம், பனை மற்றும் முருங்கை, வெங்காயம், மணத் தக்காளி கீரை, பப்பாளி, கோ-8 போன்ற ரக காய்கறி வகைகளை ஊக்குவிக்கும் வகையில் மானியங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பந்தல் முறையில் சாகுபடி செய்யும் காய்கறி பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.2 லட்சம் மானியம் வழங்கப்படும்.

எனவே, விருப்பமுள்ள விவசாயிகள் இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைய தங்கள் பகுதியில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி தங்கள் பெயரை முன்பதிவு செய்து பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love