January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

அருப்புக்கோட்டையில் கொரோனா சிகிச்சை மையங்கள் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

விருதுநகர், ஜன.10

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை மற்றும் பந்தல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா நோய் தொற்றினை கண்டறிவதற்காகவும் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்;சை அளிப்பதற்காகவும் ஏற்படுத்தப்பட்ட சிகிச்சை மையங்கள் ஆலோசனை மையங்கள் மற்றும் பரிசோதனை மையங்களை மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் கொரோனா மற்றும் தற்போது பரவி வரும் உருமாறிய கொரோனா ஓமைக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுததும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதனடிப்படையில் மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மற்றும் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கொரோனா தொற்று பரிசோதனை எடுக்கப்பட்டு வருகின்றது.

அதனடிப்படையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை மற்றும் பந்தல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா நோய் தொற்றினை கண்டறிவதற்காகவும் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்;சை அளிப்பதற்காகவும் மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட சிகிச்சை மையங்கள்பரிசோதனை மையங்கள் மற்றும் ஆலோசனை மையங்களை ஆய்வு செய்து மருத்துவமனைகளுக்கு வரும் பொதுமக்கள் கொரோனா பரிசோதனை மையம் மற்றும் ஆலோசனை மையங்கள் காய்ச்சல் பிரிவு தீவிர சிக்ச்சை பிரிவு கொரோனா நோயாளிகளின் திரையிடல் சோதனை மையம் உள்ளிட்ட பிரிவுகளை பொதுமக்கள் எளிதில் அணுகுவதற்கும் வசதியாக வழிகாட்டி பதாதைகளை வைப்பதற்கு சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.

மேலும் கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கான மருத்துவ உதவிகள் படுக்கைகள் இருப்புவிபரம் ஆக்ஸிஜன் படுக்கைகள் இருப்பு நிலவரங்கள் குறித்த தகவல்கள் தேவைப்படின் 04562-1077 04562-252094 04562-252095 என்ற தொலைபேசி எண்களை தொடர்புகொண்டு தக்க உதவிகளை பெற்றுக் கொள்ளலாம் எனவும் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு மாவட்ட மக்கள் தக்க ஒத்துழைப்பு நல்கி கொரோனா நோய்த் தொற்றிலிருந்து தங்களைக் காத்திடுமாறும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Spread the love